உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்துமசு தாத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிறிஸ்துமஸ் தாத்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிறித்துமசு தாத்தா

கிறித்துமசு தாத்தா அல்லது நத்தார் தாத்தா (Santa Claus, சாண்டா குலோஸ், அல்லது புனித நிக்கலசு) என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். மேற்குலகப் பண்பாட்டில் கிறித்துமசு நாளுக்கு முதல் நாள் டிசம்பர் 24 இரவில் இவர் குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார். [1] சண்ட குலோஸ் என்ற சொல் டச்சு மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும்.

நவீன சாண்டா குலோஸ் மரபுகளிலிருந்து வெளிவந்து வரலாற்றில் நான்காம் நூற்றாண்டில், கிரேக்கத்தில் வசித்த  ஆயர், புனித நிக்கலசு என்பவரைச் சுற்றியே வருகிறது. இவரே ஆங்கிலேய நாட்டுப்புறக் கலைப் பின்னணி கொண்ட கிறித்துமசு தாத்தாவாகவும், டச்சு நாட்டின் நாட்டுப்புறக் கலை உருவமான சின்டர்கிளாசாகவும் (இவரும் புனித நிக்கலசை அடிப்படையாகக் கொண்டவரே) சித்தரிக்கப்படுகிறார். புனித நிக்கலசு இரகசியமாக குழந்தைகளுக்குப் பரிசு தரும் இயல்புடையவராக இருந்துள்ளார். சிலர் சாண்டா குலோஸ் செருமானியக் கடவுள் ஓடினின் சாயலைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். ஓடின் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் வேட்டையாடும் கெட்ட ஆன்மாக்களை வான் வழியாக ஊர்வலமாக அழைத்து வரும் செருமானிய விழாவின் நாயகனாவார்.

ஆனால், சாண்டா குலோஸ் பொதுவாக, மகிழ்ச்சிகரமான, வெண்தாடி உடையவராக, சிவப்பு நிற மேலங்கி மற்றும் வெண்மை நிற விலங்கின் உரோமத்தினாலான கழுத்துப்பட்டி மற்றும் மணி கோர்ப்பதற்கான இடம், சில நேரம் கண்ணாடி அணிந்தும், சில நேரம் கண்ணாடி அணியாமல், சிவப்பு நிறத்தொப்பி மற்றும் கருப்பு நிற இடையணி மற்றும் காலணிகளுடன் பை நிறைய குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களுடன் வருபவராக சித்தரிக்கப்படுகிறார். மேலே வர்ணிக்கப்பட்ட தோற்றமானது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் 1823 ஆம் ஆண்டில், அரசியல் நையாண்டியுடன் கேலிச்சித்திரம் வரையும் தாமஸ் நாஸ்ட் என்பவரால் எழுதப்பட்ட புனித நிக்கோலசின் வருகை என்ற  பாடலின் குறிப்பிடத்தக்க தாக்கத்தால் பிரபலமடைந்தது. [2][3][4] இந்தத் தோற்றமானது வானொலி, தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக நிலைநிறுத்தவும், வலுவூட்டவும் பட்டது.

சாண்டா குலோஸ் உலகம் முழுவதும் உளள குழந்தைகளின் பட்டியலைக் கொண்டுள்ளதாகவும், அவர்களை, அவர்களின் நடத்தையின் அடிப்படையில் இனிமையான குழந்தை அல்லது குறும்புக்காரக் குழந்தை என்று வகைப்படுத்தி வைத்திருப்பதாகவும், கிறித்துமசு நாளுக்கு முந்தைய நாள் இரவில், நல்ல நடத்தையுடைய குழந்தைகளுக்கு பொம்மைகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பரிசுகளையும், தீய நடத்தையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நிலக்கரியையும் வழங்குவார் எனவும் கூறப்படுகிறது. அவர் தன்னுடன் வசிக்கும் அதிசய சக்தி கொண்ட உதவியாளர்களுடன், தனது பட்டறையில் உருவாக்கிய பொம்மைகளுடன் தனது ரெயின்டீர் பனிச்சறுக்கு வண்டியில் வட துருவத்திலிருந்து வருவதாக நம்பப்படுகிறது. [5][6] மேலும், கிறித்துமசு தாத்தா வட துருவப் பகுதியில் வசிப்பவராகும், அடிக்கடி "ஹோ, ஹோ, ஹோ" என்று சத்தமாக ஒலி எழுப்பி சிரிப்பவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

முன்னிருந்த உருவங்கள்

[தொகு]

புனித நிக்கலசு

[தொகு]
13ஆம் நூற்றாண்டில், சினாய் தீபகற்பத்தில் உள்ள புனித கேத்தரின் மடத்திலிருந்து பெறப்பட்ட புனித நிக்கலசின் உருவப்படம்

மிராவின் புனித நிக்கலசு என்பவர் 4ஆம் நூற்றாண்டில்,  கிரேக்கத்தில், பைசாந்தியப் பேரரசின் ஒரு மாகாணத்தின்(தற்போது இப்பகுதி துருக்கியில் உள்ளது)  வாழ்ந்த கிறித்துவப் பேராயர் ஆவார். நிக்கலசு பெருந்தன்மை மற்றும் தாராள மனப்பான்மையுடன் ஏழைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கும் விதத்தால் புகழ் பெற்றவர் ஆவார். இவர் ஏழ்மையில் வாழ்ந்த, இறை விசுவாசமுள்ள கிறித்தவர் ஒருவரின் மூன்று மகள்கள் வரதட்சணை நெருக்கடி காரணமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக பரிசுகள் மூலமாக அதைத் தடுத்துள்ள செயலால் புகழப்பட்ட புனிதர் ஆவார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Krulwich, Robert. "How Does Santa Do It?". ABC News. http://abcnews.go.com/GMA/story?id=127509&page=1. பார்த்த நாள்: December 25, 2015. 
  2. Coke denies claims it bottled familiar Santa image பரணிடப்பட்டது 2007-12-12 at the வந்தவழி இயந்திரம், Jim Auchmutey, Rocky Mountain News, 10 December 2007.
  3. "Santa's arrival lights up the Green". Archived from the original on 2012-12-05.
  4. Penne L. Restad. {{cite book}}: Missing or empty |title= (help); Unknown parameter |date  = ignored (help); Unknown parameter |isbn  = ignored (help); Unknown parameter |title  = ignored (help); Unknown parameter |url    = ignored (help)
  5. B. K. Swartz, Jr.; THE ORIGIN OF AMERICAN CHRISTMAS MYTH AND CUSTOMS பரணிடப்பட்டது 30 ஏப்பிரல் 2011 at the வந்தவழி இயந்திரம்; Retrieved 22 December 2007
  6. Jeff Westover; The Legendary Role of Reindeer in Christmas பரணிடப்பட்டது 3 ஆகத்து 2012 at the வந்தவழி இயந்திரம்; Retrieved 22 December 2007
  7. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்துமசு_தாத்தா&oldid=4105999" இலிருந்து மீள்விக்கப்பட்டது