உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்தோபர் மார்லொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறித்தோபர் மார்லொவ்
Christopher Marlowe Edit on Wikidata
பிறப்புc. 23 பெப்பிரவரி 1564
கான்டெர்பரி
திருமுழுக்கு26 பெப்பிரவரி 1564
இறப்பு30 மே 1593 (in Julian calendar) (அகவை 29)
Deptford
படித்த இடங்கள்
பணிநாடகாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்
சிறப்புப் பணிகள்Edward II, டாக்டர் பாஸ்டஸ்
கையெழுத்து

கிறிஸ்டோபர் மார்லொ, (Christopher Marlowe[1], திருமுழுக்கு 26 பெப்ரவரி 1564 – 30 மே 1593) கிட் மார்லொ எனவும் அறியப்படும் இவர் எலிசபத்தின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒப்புயர்வற்ற சிறந்த நாடக, கவிதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்[2]. குறிப்பிடத்தக்க முதல் துயர்நாடக ஏட்டாசிரியர் இவரே ஆவார். வில்லியம் ஷேக்ஷ்பியரும் இவரும் சமகாலத்தவர்கள். ஷேக்ஷ்பியர் இவருடைய சிந்தனைகளால் தாக்கமுற்றவர். இவ்விருவரும் எலிசபத்தின் காலகட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க மேலோங்கிய நாடகாசிரியர்கள் ஆவர். மார்லொவின் நாடகங்கள் ஐந்து சீர்களைக்கொண்டு சந்தமற்ற பாக்களாக அமையப்பெற்றவை. மருத்துவர் ஃபாஸ்டஸ் என்பது இவர் எழுதிய தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகும்.

இறப்பு

[தொகு]

1593 மே 18 அன்று இவரை கைது செய்வதற்குப் பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டதற்கான எவ்வித காரணங்களும் வெளிவரவில்லை, எனினும் தெய்வ நிந்தனைக்கான குற்றச்சாட்டாக இருக்கலாம் என பலரும் நினைத்தனர் (அதாவது மதக்கொள்கைக்கு எதிரான கீழ்த்தரமான கைப்பிரதியொன்றை இவர் எழுதியிருந்திருக்கக்கூடும் என நம்பினர்). மே 20 அன்று கமுக்க மன்ற குழுவிடம் விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் விசாரணைக்காக் கமுக்க மன்ற குழுவினரைச் சந்தித்ததற்கான சான்றுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை, இருப்பினும் எதிர்வாதத்திற்கு அனுமதி பெறும்வரை ஒவ்வொரு நாளும் விசாரணைக்குச் செல்லும்படி கட்டளையிடப்பட்டார். பத்து நாட்களுக்குப் பின்னர் இங்ரம் ஃப்ரைசர் என்பவரால் குத்திக்கொல்லப்பட்டார்.

மார்லொவியக் கோட்பாடு

[தொகு]

சிறந்த நாடக ஆசிரியரான மார்லொ, தான் மரித்துவிட்டதாக உலகை ஏமாற்றிப் பின்பு ஷேக்ஷ்பியர் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தன் எழுத்தால் உலகத்தை வசப்படுத்த தொடங்கினார் என்ற கோட்பாடு ஒன்று எழுந்தது. மரபுவழிக் கல்வியாளர்கள் ஷேக்ஷ்பியரின் படைப்புகளை மார்லொ உட்படப் பிறிதொருவர் எழுதியிருக்கக்கூடும் என்ற கருத்தை நிராகரிக்கின்றனர்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. "Christopher Marlowe was baptised as 'Marlow,' but he spelled his name 'Marley' in his one known surviving signature." David Kathman. "The Spelling and Pronunciation of Shakespeare's Name: Pronunciation."
  2. Robert A. Logan, Shakespeare's Marlowe (2007) p.4. "During Marlowe's lifetime, the popularity of his plays, Robert Greene's ... remarks ... including the designation "famous", and the many imitations of Tamburlaine suggest that he was for a brief time considered England's foremost dramatist."
  3. Kathman, David (2003), "The Question of Authorship", in Wells, Stanley; Orlin, Lena C., Shakespeare: an Oxford Guide, Oxford University Press, pp. 620–32, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-924522-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தோபர்_மார்லொவ்&oldid=2734374" இலிருந்து மீள்விக்கப்பட்டது