கிறிசு சிகர்டுசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிசு சுகர்டுசன்
Kris Sigurdson
பிறப்பு
தேசியம்கனடியர்
துறைஇயற்பியல்
துறை ஆலோசகர்மார்க் கமியொன்கோசுகி

கிறிசு சிகர்டுசன் ஒரு கனடிய இயற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வான்கூவர் பிரித்தானியக் கொலம்பியாவில் உள்ள இயற்பியல், வானியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார்.[1] அவர் முன்பு நாசாவினலபுள் ஆய்வுறுப்பினராகவும் உயர் ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[2][3] கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4]

சிகர்டுசன் அண்டவியல் சிற்றலைவுகளில் இருண்ட பொருளின் விளைவுகள் குறித்த பணிக்காகவும் இருண்ட பொருள் துகள் இயற்பியலின் புதிய படிமங்களுக்காகவும் அண்டவியல் மூலம் பல்லண்ட அடையாளங்களைக் கவனிப்பதற்கான திறனுக்காகவும் அறியப்படுகிறார்.[5][6][7][8][9][10] தொடக்கநிலைப் புடவியின் இயற்பியல் , அண்டவியல் சிற்றலைவுக் கோட்பாடு, 21 செமீ அண்ட அலைவுகள் ஆகியவை அவரது பிற படைப்புகள் அடங்கும்.[11]

2010 ஆம் ஆண்டில் , இருண்ட பொருளின் உருவாக்கத்தை அடர்துகளாக்கத்துடன் இணைக்கும் பொருளின் தோற்றம் குறித்த கோட்பாடான இருட்துகளாக்கக் கோட்பாட்டை முன்மொழிந்த ஒரு கட்டுரையை அவர் பிறருடன்இணைந்து எழுதினார்.[12] நீண்ட காலத்திற்கு முதன்மின்கள் அல்லது நொதுமிகள் இருண்ட பொருளுடன் தொடர்புகொள்வதன் மூலம் அழிக்கப்படலாம் என்று இந்தக் கோட்பாடு கணித்துள்ளது.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kris Sigurdson. UBC Physics & Astronomy People Directory. Retrieved on 2012-03-03.
  2. Listing of all Hubble Fellows பரணிடப்பட்டது 2012-08-05 at Archive.today. Space Telescope Science Institute. Retrieved on 2012-03-03.
  3. Previous People பரணிடப்பட்டது 2012-02-27 at the வந்தவழி இயந்திரம். IAS School of Natural Sciences. Retrieved on 2012-03-03.
  4. 2005 Commencement. California Institute of Technology. Retrieved on 2012-03-03.
  5. What Mass Are the Smallest Protohalos?. Physical Review Letters. Retrieved on 2012-03-03.
  6. Charged-Particle Decay and Suppression of Primordial Power on Small Scales. Physical Review Letters. Retrieved on 2012-03-03.
  7. Unified Origin for Baryonic Visible Matter and Antibaryonic Dark Matter. Physical Review Letters. Retrieved on 2012-03-03.
  8. X Particle Explains Dark Matter and Antimatter at the Same Time. Wired Science. Retrieved on 2012-03-03.
  9. How to spot a multiverse. physicsworld.com. Retrieved on 2012-03-03.
  10. Greene, Brian (2011). The Hidden Reality: Parallel Universes and the Deep Laws of the Cosmos. Page 166.
  11. Publications. Kris Sigurdson at the University of British Columbia. Retrieved on 2012-03-03.
  12. Hylogenesis: A Unified Origin for Baryonic Visible Matter and Antibaryonic Dark Matter. Cornell University Library. Retrieved on 2012-03-03.
  13. Baryon destruction by asymmetric dark matter. Physical Review D. Retrieved on 2012-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசு_சிகர்டுசன்&oldid=3769331" இலிருந்து மீள்விக்கப்பட்டது