உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிசு ஃபுரூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிசு ஃபுரூம் 2013இல்

கிறிஸ்டபர் ஃபுரூம் (Christopher Froome, பிறப்பு மே 20, 1985) பிரித்தானிய சாலைப் பந்தய மிதிவண்டி வீரர். இவர் கென்யாவின் நைரோபியில் பிரித்தானியக் குடும்பமொன்றில் பிறந்தவர்.[1] தமது 14வது அகவையில் தென்னாப்பிரிக்கா சென்றார். தற்போது மொனாக்கோவில் வாழ்கிறார். இசுகை அணியின் பங்காளராக போட்டிகளில் பங்கேற்கிறார். 2007ஆம் ஆண்டில் அல்ஜியர்சில் நடந்த அனைத்து ஆபிரிக்க விளையாட்டுக்களில் கென்யாவின் சார்பாளராக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். 2008-ஆம் ஆண்டுமுதல் பிரிட்டிசு உரிமத்துடன் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெரிய பிரித்தானியாவிற்காக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். 2013, 2015, 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளின் தூர் த பிரான்சு போட்டிகளை வென்றுள்ளார்.[2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Bio". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2013-07-24.
  2. Fotheringham, William (23 July 2017). "Chris Froome wins fourth Tour de France after Champs Élysées procession". The Guardian. https://www.theguardian.com/sport/2017/jul/23/chris-froome-wins-fourth-tour-de-france. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசு_ஃபுரூம்&oldid=3549912" இலிருந்து மீள்விக்கப்பட்டது