உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேஞ்சர் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேஞ்சர் அருவி (Grainger Falls) என்பது நியூசிலாந்தின் பியர்டுலாந்தில் உள்ள ஒரு அருவி ஆகும்.[1] இது அடுக்கு மற்றும் மின்விசிறி வகை அருவியின் வகையாகும்.

1880களில் நியூசிலாந்தில் தேடுதல் பயணங்களைச் செய்த ஆஸ்திரியரான ஆண்ட்ரியாஸ் ரெய்செக், கிரேஞ்சர் அருவியை முதன்முதலில் பதிவு செய்தார். அவர் தனது நண்பரான ஆல்ஃபிரட் கிரேங்கரின் பெயரை அந்த அருவிக்கு பெயரிட்டார். [2] இந்த அருவியின் சரியான அமைவிடம் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் நாள் டாக்டர் டேவிட் ரிச்சர்ட்ஸ், டாக்டர் ராய் கார்டன் கிரைங்கர் ஆகியோரால் நிறுவப்பட்டது.[3] எக்டர் ஏரியை வெளியேற்றும் மற்றும் அருவியைக் கொண்டிருக்கும் இந்த நீரோடை பெயரிடப்படாததால், நியூசிலாந்தின் புவியியல் பெயரிடும் வாரியம் அதை கிரேங்கர் நீரோடை என்று அழைத்தது. கிரேஞ்சர் அருவி மற்றும் நீரோடை ஆகியவை இப்போது நியூசிலாந்து அரசிதழில் அதிகாரப்பூர்வ புவியியல் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. [4] NZ Topo50 தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் வெஸ்ட் கேப் (CF04) வரைபடத்தில் அவை காட்டப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Grainger Falls New Zealand Place Names Database (Archived). Land Information, New Zealand (LINZ). Retrieved 25 December 2011.
  2. Reischek, Andreas. Yesterdays in Maoriland. Jonathon Cape, London, 1930, page 248.
  3. http://www.atm.ox.ac.uk/user/grainger/gf/index.html பரணிடப்பட்டது 29 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம் Grainger's website. Retrieved 25 December 2011.
  4. http://www.linz.govt.nz/placenames/find-names/nz-gazetteer-official-names Gazetteer of NZ place names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேஞ்சர்_அருவி&oldid=3868495" இலிருந்து மீள்விக்கப்பட்டது