கிருஷ்ணா ராணி சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணா ராணி சர்க்கார் (ஆங்கிலம்: Krishna Rani Sarkar; பெங்காலி :কৃষ্ণা রানী সরকার; பிறப்பு 1 சனவரி 2001)[1] என்பவர் வங்காளதேச பெண்கள் கால்பந்து விளையாட்டின் முன்கள வீரர். இவர் தற்போது வங்காளதேசம் பெண்கள் தேசிய கால்பந்து அணியிலும், சுதி வி. எம். முன் மாதிரி உயர்நிலைப் பள்ளியிலும் விளையாடி வருகிறார். இவர் 2015-ல் நேபாளத்தில் ஏ. எப். சி. 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிராந்திய வீரர் போட்டியினை வென்ற - தெற்கு மற்றும் மத்திய அணியில் உறுப்பினராக இருந்தார். 17 வயதுக்குட்பட்ட வங்காளதேச பெண்கள் தேசிய கால்பந்து அணியின் அணித்தலைவராகவும் இருந்தார்.

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

கிருஷ்ணா 2015 ஏ. எப். சி. 16 வயதிற்குட்பட்ட மகளிர் வெற்றித் தகுதி - 2014-ல் பி பிரிவு போட்டிகளுக்கான வங்காளதேச பெண்கள் 17 வயதிற்குட்பட்ட மகளிர் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் நான்கு போட்டிகளில் விளையாடி பந்தை ஒரு முறை எல்கைக்கு அனுப்பினார். 2015-ல் தெற்கு மற்றும் மத்திய ஏ. எப். சி. 15 வயதிற்குட்பட்ட மகளிர் பிராந்திய வெற்றி வென்ற அணியின் ஒருங்கிணைந்த உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் 2017 ஏ. எப். சி. 16 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவு சி போட்டிகளுக்கான அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் அபாரமாக விளையாடி 5 போட்டிகளில் 8 முறை பந்தினை இலக்கில் செலுத்தியுள்ளார். குழு சி வெற்றியாளராக இருந்ததால், வங்காளதேசம் செப்டம்பர் 2017-ல் தாய்லாந்தில் 2017 ஏ. எப். சி. 16 வயதிற்குட்பட்ட மகளிர் தகுதி பெற்றது.[2]

சர்வதேச இலக்குகள்[தொகு]

தரமதிப்பு மற்றும் முடிவுகள் முதலில் வங்கதேசத்தின் இலக்கு எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது.
வ. எண் தேதி இடம் எதிரணி புள்ளிகள் முடிவு போட்டி
1 13 நவம்பர் 2014 ஜின்னா விளையாட்டரங்கம், இஸ்லாமாபாத், பாக்கித்தான்  ஆப்கானித்தான் 2-1 6–1 2014 எஸ். ஏ. எப். எப். பெண்கள் போட்டி
2 3-1
3 5-1
4 7 பிப்ரவரி 2016 ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், சில்லாங், இந்தியா இலங்கை 1-0 2–1 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
5 2-1
6 11 நவம்பர் 2018 துவுன்னா விளையாட்டரங்கம், யங்கோன், மியான்மர்  இந்தியா 1 -7 1–7 2020 ஏ. எப். சி. மகளிர் ஒலிம்பிக் தகுதிப் போட்டி
7 23 சூன் 2022 பிஎஸ்எஸ்எஸ் முஸ்தபா கமல் விளையாட்டரங்கம், டாக்கா, வங்காளதேசம் மலேசியா 6-0 6–0 நட்புரீதியான போட்டி
8 13 செப்டம்பர் 2022 தசரத் விளையாட்டரங்கம், காத்மாண்டு, நேபாளம் இந்தியா 2-0 3–0 2022 எஸ். ஏ. எப். எப். பெண்கள் போட்டி
9 16 செப்டம்பர் 2022 தசரத் விளையாட்டரங்கம், காத்மாண்டு, நேபாளம் பூட்டான் 3-0 8–0
10 19 செப்டம்பர் 2022 தஷ்ரத் விளையாட்டரங்கம், காத்மாண்டு, நேபாளம் நேபாளம் 2-0 3–1
11 3-1

கௌரவங்கள்[தொகு]

பசுந்தரா மன்னர்கள் பெண்கள்

  • வங்காளாதேசம் பெண்கள் கால்பந்து சுற்று: 2019–20,[3] 2020–21[4]

வங்காளதேசம்

வங்காளதேசம் 19 வயதிற்குட்பட்டோர்

  • எஸ். ஏ. எப். எப். 18 வயதிற்குட்பட்டோர் பெண்கள் போட்டி: 2018
  • பங்கமாதா 19 வய்திற்குட்பட்டோர் மகளிர் பன்னாட்டுத் தங்கக் கோப்பை : 2019

வங்காளதேசம் 14 வயதிற்குட்பட்டோர்

  • ஏ. எப். சி. 14 வயதிற்குட்பட்ட பெண்கள் தெற்கு மற்றும் மத்திய பிராந்திய போட்டி– : 2015

மேற்கோள்கள்[தொகு]