கிருஷ்ணா கௌர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணா கௌர்
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்பாபுலால் கௌர்
தொகுதிகோவிந்தபுரா சட்டமனறத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1967/1968 (அகவை 55–56)[1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்புருசோத்தம் கௌர் (இறப்பு 2004)
உறவினர்கள்பாபுலால் கௌர் (மாமனார்)
வாழிடம்(s)சுவாமி தயானந்தா நகர், போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா
வேலைவர்த்தகம்
அறியப்படுவதுசமூகப் பணி
இணையத்தளம்krishnagaur.in/d/

கிருஷ்ணா கௌர் (Krishna Gaur) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும், சமூக சேவகருமாவார்.[1] இவர் 2018இல் நடந்த மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக கோவிந்த்புராத் தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் கிரிஷ் சர்மாவை 46,359 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2] போபாலிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணான இவர், போபாலின் நகரத் தந்தையாகவும்,[3] 2005இல் மத்திய பிரதேச மாநில சுற்றுலா கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

தனது மாமனார் பாபுலால் கௌருக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கோவிந்த்புரா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கிரீஷ் சர்மாவை 46,359 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][5]

சொந்த வாழ்க்கை வாழ்க்கை[தொகு]

கௌர் மூத்த அரசியல்வாதியான பாபுலால் கௌரின் மகன் புருஷோத்தம் கௌர் என்பவரை மணந்தார். புருஷோத்தம் கௌர் 2004இல் இறந்தார்.[1][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Krishna Gaur(Bharatiya Janata Party(BJP)):Constituency- GOVINDPURA(BHOPAL) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 26 August 2019.
  2. Singh, Ramendra (13 December 2018). "Krishna Gaur wants bigger share for women in Indian politics" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bhopal/krishna-gaur-wants-bigger-share-for-women-in-indian-politics/articleshow/67067767.cms. 
  3. 3.0 3.1 Noronha, Rahul (21 August 2019). "Babulal Gaur: Man who could never believe he was king" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/babulal-gaur-man-who-could-never-believe-he-was-king-1590058-2019-08-21. 
  4. "Madhya Pradesh poll: Krishna Gaur- Can she emulate the heroics of her father-in-law Babulal Gaur?" (in en). Times Now. 22 November 2018. https://www.timesnownews.com/elections/article/madhya-pradesh-poll-krishna-gaur-the-key-candidates-of-assembly-elections-2018-can-krishna-gaur-emulate-the-heroics-of-her-father-in-law-former-chief/317965. 
  5. "Bhopal's First Woman MLA Krishna Gaur Elected From Govindpura" (in en). NewsClick. 12 December 2018. https://www.newsclick.in/bhopals-first-woman-mla-krishna-gaur-elected-govindpura. 
  6. "A chapter ends in MP politics as Babulal Gaur takes final bow". uniindia.com. 21 August 2019. http://www.uniindia.com/a-chapter-ends-in-mp-politics-as-babulal-gaur-takes-final-bow/north/news/1704894.html. 
  7. "Former Madhya Pradesh chief minister Babulal Gaur passes away" (in en). Hindustan Times. 21 August 2019. https://www.hindustantimes.com/india-news/former-madhya-pradesh-chief-minister-babulal-gaur-passes-away/story-4Uis611UJMmLJJ3JH7DUIK.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_கௌர்&oldid=3267991" இலிருந்து மீள்விக்கப்பட்டது