கிருஷ்ணவேணி பஞ்சாலை
கிருஷ்ணவேணி பஞ்சாலை | |
---|---|
இயக்கம் | தனபால் பத்மநாபன் |
தயாரிப்பு | மின்வெளி மீடியா ஒர்க்ஸ் |
கதை | Dதனபால் பத்மநாபன் |
இசை | என். ஆர். ரகுநந்தன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சுரேஷ் பார்கவ் அதிசயராஜ் |
படத்தொகுப்பு | மு. காசிவிசுவநாதன் |
கலையகம் | மின்வெளி மீடியா ஒர்க்ஸ் |
வெளியீடு | 8 சூன் 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிருஷ்ணவேணி பஞ்சாலை (Krishnaveni Panjaalai) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குனர் தனபால் பத்மநாபனால் எழுதி இயக்கப்பட்டது. இந்த படத்தில் ஹேமச்சந்திரன், நந்தனா, எம். எஸ். பாஸ்கர், இராஜீவ் கிருஷ்ணா, பால சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980 களின் பின்னணியில் எடுக்கபட்டுள்ளது. மேலும் இது பருத்தி ஆலை தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையாகும்.[1] இப்படத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று புகழ் என். ஆர். ரகுநந்தன் இசையமைத்தார். இப்படம் 2012 சூன் 8 அன்று வெளியிடப்பட்டது.[2]
கதை[தொகு]
கதிர் (ஏமச்சந்திரன்) மற்றும் பூங்கோதை (நந்தனா) ஆகியோர் தென் தமிழகத்தின் பருத்தி ஆலை தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களின் நட்பு காதலாக வளர்கிறது. ஆலையில் நடக்கும் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஆலை மூடப்படுகிறது. இதனால் அங்கு வேலை செய்யும் அனைவரது வாழ்க்கையும் கடினமான நிலைக்கு ஆளாகிறது.
நடிப்பு[தொகு]
- ஏமச்சந்திரன் -கதிராக
- நந்தனா -பூங்கோதையாக
- எம். எசு. பாசுகர்
- இராஜீவ் கிருஷ்ணா -கிருஷ்ணமூர்த்தியாக
- பாலா சிங்
- தென்னவன்
- சண்முகராஜன்
இசை[தொகு]
இப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்தார்.
எண் | பாடல் | பாடல் வரிகள் | பாடகர் (கள்) | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | "ஆலைக்காரி" | வைரமுத்து | விஜய் பிரகாஷ் | |
2 | "ஆத்தாடி" | சித்திரன் | ஹரிஷ் ராகவேந்திரா, சித்தாரா | |
3 | "ரோஜமாலையே" | வைரமுத்து | ஜாசி கிஃப்ட் | |
4 | "உன் கண்கள்" | தாமரை | ராமன் மகாதேவன், சிரேயா கோசல், ரனினா ரெட்டி | |
5 | "உன் கண்கள்" II | தாமரை | ராமன் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், ரனினா ரெட்டி |
வெளியீடு[தொகு]
டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் மூன்றரை மதிப்பீட்டை வழங்கியது மேலும் " கிருஷ்ணவேணி பஞ்சாலை" படத்தின் சில பகுதிகள் நன்கு வேலை செய்கிறது. மேலும் அதன் திரைக்கதை மிகவும் இறுக்கமாக பின்னப்பட்டிருந்தால் மேலும் ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கலாம் "என்று குறிப்பிட்டார்.[3] இந்துவில் இருந்து ஒரு விமர்சகர் எழுதினார் "திரைக்கதையில் தான் தனபால் தடுமாறுகிறார். காட்சிகள் திடீரென முடிவடைந்து, ஒற்றுமையின்றி தனித்தனி இழைகளாக நிற்கின்றன ".[4] இந்தியா டுடே குறிப்பிட்டது, "படத்தின் உச்சக்கட்டம் மிகவும் உணர்ச்சிகரமானதாகவும், மனதைத் தொடுகிறதாகவும் உள்ளது. இருப்பினும், திரைக்கதை மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம் ".[5]
குறிப்புகள்[தொகு]
- ↑ "'Krishnaveni Panjalai' USA release details". IndiaGlitz. 8 June 2012. 10 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Friday Fury- June 8". Sify. 8 June 2012. 10 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/krishnaveni-panjaalai/movie-review/13953633.cms
- ↑ https://www.thehindu.com/features/cinema/Krishnaveni-Panjaalai-Foibles-and-consequences/article12642759.ece
- ↑ https://www.indiatoday.in/movies/celebrities/story/krishnaveni-panjaalai-dhanapal-padmanabhan-hemachandran-nandana-105658-2012-06-14