கிராட்டனின் மிலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசப்-பெனாய்ட் சுவீ வரைந்த கிராட்டனின் மிலோ (18 ஆம் நூற்றாண்டு, கேன்வாசில் எண்ணெய் வர்ணத்தில் வரையப்பட்டது), மிலோவின் உடற்பகுதி மரப்பிளவில் சிக்கியிருப்பதை சித்தரிக்கிறது.

கிராட்டனின் மிலோ (Milo of Croton, (/ˈml/; Greek: Μίλων, Mílōn; gen.: Μίλωνος, Mílōnos) என்பவர் கி,மு 6 நூற்றாண்டின் மாக்னா கிரேசியன் நகரமான கிராட்டனைச் சேர்ந்த ஒரு மற்போர் வீரர் ஆவார். இவர் பண்டைய கிரேக்கத்தின் மிக முக்கியமான தடகள போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றவர். [1] [2] [3] இவரது தந்தையின் பெயர் டியோடிமஸ் (μος). [4] இவரது தடகள வெற்றிகளுக்கும் மேலாக, கி.மு 510 இல் அண்டை நாடான சைபரிஸ் மீதான படையெடுப்பின்போது தனது நாட்டுப் படை வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

ஒலிம்பிக் பந்தயம் நடக்கின்ற நாளில், நான்கு வயதுள்ள கன்றுக்குட்டி ஒன்றைத் தோளில் போட்டு சுமந்து கொண்டு, ஒலிம்பியாவில் உள்ள பந்தயம் மைதானம் முழுவதையும் சுற்றித் திரிந்து மிலோ வருவார் என்றும் பிறகு, அதே நாளில் அதைக் கொன்று, அதை ஒரே நாளில் தின்று தீர்த்து விடுவார் என்று. கூறப்படுகிறது.[சான்று தேவை]

மிலோ இறந்த நாள் சரியாக தெரியவில்லை. தொன்மக் கதையின்படி, காட்டில் வீழ்ந்துகிடந்த ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியில் சிறுபிளவில் கையை விட்டுப் பெரிதாகப் பிளந்திட முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக பிளவின் இடையிலே மாட்டிக் கொண்ட மிலோவால் வெளிவர முடியவில்லை. அப்போது அங்கு வந்த ஓநாய்களின் கூட்டம் (பிற்கால பதிப்புகளில் பெரும்பாலும் இது சிங்கமாக மாற்றிக்கூறப்பட்டது) மிலோவை தின்றுவிட்டன. இந்த கதையை பியர் புஜெட், எட்டியென்-மாரிஸ் பால்கனெட் மற்றும் பலர் கலைப் படைப்புகளில் சித்தரித்துள்ளனர். இந்த கதையின் இலக்கிய குறிப்புகள் ரபேலீஸின் கர்கன்டுவா மற்றும் பாண்டாக்ரூல், ஷேக்ஸ்பியரின் ட்ரொயிலஸ் மற்றும் கிரெசிடா மற்றும் அலெக்சாண்டர் டூமாசின் தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் போன்ற படைப்புகளில் காணப்படுகின்றன.

தடகள வாழ்க்கை[தொகு]

மிலோ ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். இவர் மாணவர்களுக்கான மற்போரில் வென்றார் (அநேகமாக கி.மு 540 இல் ), [5] அதன்பிறகு 536 மற்றும் கி.மு 520 க்கு இடையில் ஐந்து ஆடவர் மல்யுத்த போட்டிகளில் வெற்றியாளரானார். [1] [2] [3] டெல்பியில் நடந்த பைத்தியன் விளையாட்டுப் போட்டிகளில் தனது சக நகரின் வீரர்களுடன் ஏழு கிரீடங்களையும, இஸ்த்மியன் விளையாட்டுகளில் பத்து முறையும், நேமியன் விளையாட்டுகளில் ஒன்பது முறையும் கிரீடங்களையும் வென்றார். மிலோ ஆடவருக்கான மல்யுத்தப்போட்டியில் ஐந்து ஒலிம்பிக் பந்தயங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறு "கிராண்ட் ஸ்லாம்" என்ற பட்டத்தை பெற்றார். அதாவது மிக நீண்டகாலமாக வெற்றியாளராக அதிகப்படியான போட்டிகளில் வென்ற மிலோவின் விளையாட்டு வாழ்க்கை 24 ஆண்டுகள் நீடித்திருக்க வேண்டும்.

தனது எதிரிகளை அச்சுறுத்துவதற்காக, மிலோ தனது எதிரியின் முன்னிலையில் காளை மாட்டின் பச்சை இறைச்சியை உட்கொள்வார். மேலும் ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்திக்காக காளையின் இரத்தத்தையும் குடிப்பார். [6]

கி.மு 516 இல் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது ஏழாவது முறையாக வெற்றிபெற முயன்றபோது மிலோ டிமாஸ்தியஸ் என்ற ஒரு வீரனிடம் தோற்றுப்போனார்.[1] [2] [3]

மிலோவின் சொந்த ஊரானது சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் புகழ் பெற்றது. எடுத்துக்காட்டாக கி.மு. 576ஆம் ஆண்டு கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கு, கிராட்டனிலிருந்து 6 வீரர்கள் சென்றனர். அவர்கள் 6 பேரும் ஓட்டப் பந்தயத்தில் முதலாவது வந்த ஏழு பேர்களில் இடம் பெற்று இருந்தனர் என்பது வரலாறு. மிலோவின் வெற்றிகளுக்குப் பிறகு, கிராட்டன் நகரானது புகழ்பெற்ற வேறு எந்த விளையாட்டு வீரர்களையும் உருவாக்கவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பௌசானியசின் கூற்றுப்படி இவர் டியோடிமஸின் மகனாவார். [7] பண்டைய உரையாசிரியர்கள் மிலோவிற்கும் தத்துவஞானி பித்தகோரசுக்கும் இடையிலான தொடர்பைக் குறிப்பிடுகின்றனர். அவர் பல ஆண்டுகளாக கிரோட்டனில் அல்லது அதற்கு அருகில் வாழ்ந்தார். [2] உரையாசிரியர்கள் தத்துவஞானியை தடகள பயிற்சியாளரான சமோஸின் பித்தகோரசுடன் சேர்த்து குழப்பிக்கொண்டிருக்கலாம், ஆனால் பயிற்சியாளரும் தத்துவஞானியும் ஒரே நபராகவும் இருந்திருக்கலாம். [8]

ஒரு விருந்து மண்டபத்தில் ஒரு தூண் இடிந்து விழுந்தபோது மிலோ பித்தகோரஸின் உயிரைக் காப்பாற்றியதாகவும், பித்தகோரஸ் பாதுகாப்பாக நகரும் வரை இவர் கூரையை தாங்கி இருந்தாகவும் கூறப்பட்டது. [2] இவர் பித்தகோரியன் அல்லது பித்தகோரஸின் மகளான மைகாவை மணந்திருக்கலாம் எனப்படுகிறது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Spivey, Nigel Jonathan (2004). The Ancient Olympics. Oxford and New York: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 65–66, 100–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280433-4. பார்க்கப்பட்ட நாள் 2009-03-01.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Poliakoff, Michael B. (1987). Combat Sports in the Ancient World. New Haven and London: Yale University Press. pp. 117–119, 182–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-03768-5. பார்க்கப்பட்ட நாள் 2009-03-01.
  3. 3.0 3.1 3.2 3.3 Harris, H.A. (1964). Greek Athletes and Athletics. London: Hutchinson & Co. pp. 110–113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-20754-9.
  4. Pausanias, Description of Greece, 6.14.5
  5. At Olympia, a "boy" was a male between his seventeenth and twentieth birthday. (Harris, p. 154–155)
  6. Henry, Blaine (2019-12-30). "History Lesson: Milo of Croton". The Fight Library (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  7. Pausanias, VI, 14, 5.
  8. Reidwig, Christoph (2005). Pythagoras. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8014-4240-7. பார்க்கப்பட்ட நாள் 2009-04-03.

வெளி இணைப்புகள்[தொகு]

  • விட்டோரியா, புஜெட், பால்கனெட் மற்றும் சுவீ எழுதிய மிலோ ஆஃப் க்ரோட்டனின் கலை சித்தரிப்புகளின் வலை தொகுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராட்டனின்_மிலோ&oldid=3739800" இலிருந்து மீள்விக்கப்பட்டது