அலெக்சாண்டர் டூமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாண்டர் டூமா
1855இல் டூமா.
1855இல் டூமா.
பிறப்புடூமா டேவி டெ லா பெய்லெடெரி
(1802-07-24)24 சூலை 1802
வில்லேர்ஸ்-கோட்டெரெட்ஸ், ஐனே, பிரான்சு
இறப்பு5 திசம்பர் 1870(1870-12-05) (அகவை 68)
புய் (டீப் அருகே), சீன்-மாரிடைம், மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசு
தொழில்நாடகாசிரியர், புதின எழுத்தாளர்
தேசியம்பிரெஞ்சு
காலம்1829–1869
இலக்கிய இயக்கம்காதல் மற்றும் வரலாற்றுப் புதினம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த திரீ மஸ்கிடீர்ஸ்
கையொப்பம்

அலெக்சாண்டர் டூமா , {Alexandre Dumas, அலெக்சாண்டர் டூமாஸ், pronounced [a.lɛk.sɑ̃dʁ dy.ma], பிறப்பு டூமா டாவி டெலா பயெற்றி ([dy.ma da.vi də pa.jət.ʁi]) (24 சூலை 1802 – 5 திசம்பர் 1870)[1] அவரது சாகசமிக்க வரலாற்றுப் புதினங்களுக்காக உலகெங்கும் படிக்கப்படுகின்ற ஓர் பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த திரீ மஸ்கிடீர்ஸ், ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர், த வைகௌன்ட் டெ ப்ராக்லோன் உட்பட அவரது பல புதினங்கள் துவக்கத்தில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. நாடகங்களும் இதழ்களில் கட்டுரைகளும் ஆசிரியருக்குக் கடிதங்களும் எழுதி வந்தார்.

பிரெஞ்சு பிரபுவிற்கும் ஹைத்திய அடிமைக்கும் பேரனாகப் பிறந்த டூமா இளமையில் வறுமையில் வாடியவர். கல்வி கற்கவும் வழியில்லாது கையில் கிடைத்ததை எல்லாம் படித்து வந்தார். தனது தந்தையின் வீரச்செயல்களை அன்னை மூலம் கேட்டறிந்த டூமாவிற்கு சாகசங்கள் நிறைந்த கற்பனை விரிந்தது. தமது 20வது அகவையில் பாரிசுக்கு இடம் பெயர்ந்து அங்கு அரண்மனையில் பணி புரிந்து வந்தார்.அப்போது தான் இதழ்களுக்கு கதை எழுதத் துவங்கினார். விரைவிலேயே அவரது திறமை வெளிப்பட்டு புகழ்பெறத் துவங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Alexandre Dumas பரணிடப்பட்டது 2009-10-31 at the வந்தவழி இயந்திரம்on Encarta. 2009-10-31.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alexandre Dumas (père)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_டூமா&oldid=3931615" இலிருந்து மீள்விக்கப்பட்டது