உள்ளடக்கத்துக்குச் செல்

கியார்கி திமித்ரோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியார்கி திமித்திரோவ்
Georgi Dimitrov
Георги Димитров Михайлов
பல்கேரியா கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு பொதுச் செயலாளர்
பதவியில்
டிசம்பர் 1946 – 2 சூலை 1949
முன்னையவர்கிறிஸ்டோ கபாக்சியெவ்
பின்னவர்வால்கோ செர்வென்கோவ்
பல்கேரியாவின் 32வது பிரதமர்
பதவியில்
23 நவம்பர் 1946 – 2 சூலை 1949
முன்னையவர்கீமோன் கியோர்கியெவ்
பின்னவர்வசீல் கொலாரொவ்
பொதுவுடைமை அனைத்துலகத்தின் செயற்குழு பொதுச் செயலாலர்
பதவியில்
1934–1943
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கியார்கி திமீத்ரோவ் மிக்கைலோவ்

(1882-06-18)18 சூன் 1882
கொவாசெவ்த்சி, பல்கேரியா
இறப்பு2 சூலை 1949(1949-07-02) (அகவை 67)
உருசியா, சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சிபல்கேரியா கம்யூனிஸ்டுக் கட்சி
துணைவர்(கள்)லியூபிக்கா இவொசேவிச் (1906–1933)
ரோசா யூலியேவ்னா (1949 வரை)
தொழில்புரட்சியாளர், அரசியல்வாதி

கியார்கி திமித்ரோவ் மிக்கைலோவ் (Georgi Dimitrov Mikhaylov, பல்கேரிய: Гео̀рги Димитро̀в Миха̀йлов, உருசியம்: Гео́ргий Миха́йлович Дими́тров, கியார்கி மிகைலொவிச் திமீத்ரொவ்; சூன் 18, 1882 - சூலை 2, 1949) பல்கேரியாவின் பொதுவுடைமை அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் விளங்கியவர். பல்கேரியப் பொதுவுடைமைக் கட்சியை அரும்பாடு பட்டு உருவாக்கி அதன் தலைவராக 1946 முதல் 1949 வரை இருந்தவர். லெனின் வழியில் தோன்றிய பொதுவுடைமைவாதி; பாசிசத்திற்கும் முதலாளியத்திற்கும் எதிராகப் போராடியவர்.

முதல் உலகப் போரை அவர் எதிர்த்த காரணத்தால் திமிட்ரோவ் சிறையில் தள்ளப் பட்டார் 1933 பிப்பிரவரியில் நிகழ்ந்த ரிச்டாக் தீ விபத்தில் அவர் குற்றம் சுமத்தப் பட்டுக் கைதானார். இக்குற்றச்சாட்டு சோடனை செய்யப்பட்ட ஒன்று என்று மெய்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலையானார்.

பொதுவுடைமைத் தலைவர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.1934 முதல் 1943 வரை உலகப் பொதுவுடைமைக் கட்சியின் மூன்றாம் பேரவையை வழிநடத்திச் சென்றார்

யூகோசுலேவிய நாட்டின் தலைவரான டிட்டோவுடன் நட்பு பாராட்டினார்.பல்கேரியா,யூகோசுலேவியா ஆகிய இரு நாடுகளும் இணக்கமாக இருந்தன.மாசிடோனியா என்னும் நாட்டைத் தம் பல்கேரியா நாட்டோடு இணைக்க டிமிட்ரோவ் விரும்பினார்.ஆனால் டிட்டோ இதற்கு உடன்படவில்லை.எனவே இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.ஸ்டாலின் இரு நாட்டுத் தலைவர்களிடையே சமாதானம் ஏற்படுத்த முயன்றார்.ஆனால் அம்முயற்சியில் ஸ்டாலின் வெற்றியடையவில்லை.

1949இல் டிமிட்ரோவ் காலமானார். அவர் இறந்த பின்னர் அவர் உடலை பதப்படுத்தி பாதுகாத்தனர்.ஆனால் கம்யூனிசம் அந்நாட்டில் வீழ்ச்சியுற்றதும் 1990 இல் அவரது உடலைப் புதைத்து விட்டனர்.

மேற்கோள்[தொகு]

Georgi Dimitrov Reference Archive

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Georgi Dimitrov
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியார்கி_திமித்ரோவ்&oldid=2714247" இலிருந்து மீள்விக்கப்பட்டது