கியான்சித்தா
கியான்சித்தா ကျန်စစ်သား | |||||
---|---|---|---|---|---|
ஆனந்தா கோவிலில் உள்ள கியான்சித்தாவில் சிலை | |||||
பர்மா மன்னர் | |||||
ஆட்சிக்காலம் | 21 ஏப்ரல் 1084 - 1112/13 | ||||
முன்னையவர் | சா லு | ||||
பின்னையவர் | அலுங்கிசித்து | ||||
பிறப்பு | 21 ஜூலை 1030 Tuesday, 5th waning of Wagaung 392 ME பயேய்ம்மா, சகாயிங் | ||||
இறப்பு | 1112/13 (அகவை ~82) 474 ME பாகன் | ||||
துணைவர் | அப்யேதன தன்புலா கின் டான் மணிசண்டா | ||||
குழந்தைகளின் பெயர்கள் | ச்வே எய்ந்தி யாசகுமார் | ||||
| |||||
மரபு | பேகன் இராச்சியம் | ||||
தந்தை | அனவ்ரஹ்தா | ||||
தாய் | பைசா கல்யாணி | ||||
மதம் | தேரவாத பௌத்தம் |
கியான்சித்தா (பர்மியம்: ကျန်စစ်သား,tɕàɰ̃sɪʔθá) என்பவர் பர்மாவை ஆண்ட பேகன் அரசமரபைச் சேர்ந்த மன்னராவார். இவர் பர்மாவை மன்னராக 1084 முதல் 1112 வரை ஆண்டார். இவர் மிகப்பெரிய பர்மிய மன்னர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் தனது தந்தை அனவ்ரஹ்தாவால் கொண்டுவரப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார சீர்திருத்தங்களைத் கடைப்பிடித்து ஆட்சிச் செய்தார். இவரது 28 ஆண்டுகால ஆட்சியில் உலகளவில் அங்கீகாரம் பெற்ற சக்தியாக மாறினார். பர்மிய மொழியும் அதனின் பண்பாடும் தொடர்ந்து நிலைபெற்றது.
தொடக்க வாழ்க்கையில், கியான்சித்தா புகழ்பெற்ற வெற்றிகரமான கட்டளையாளராக இருந்தார். இவர் பேகன் பேரரசை நிறுவிய அனவ்ரஹ்தாவின் முக்கிய இராணுவ போர்த்தொடர்களுக்கு தலைமை தாங்கினார். இராணி மணிசண்டாவுடனான கள்ள உறவால் இவர் 1070 - 1080களில் இரண்டு முறை நாடுகடத்தப்பட்டார். கியான்சித்தா 1084-ல் சா லூ மன்னரைக் கொன்ற ஒரு பெரிய மோன் கிளர்ச்சியை அடக்கியப் பின்பு அரியணை ஏறினார்.[1] இவரது ஆட்சி பெரும்பாலும் அமைதியாக இருந்தது. மோன் கலாச்சாரத்தின் பெரும் அபிமானியாக இருந்தார். இவர் மோன் மக்கள் வசிக்கும் தெற்கு பகுதி நோக்கிய ஒரு சமரசக் கொள்கையை பின்பற்றினார். இவரது நீதிமன்றத்திலும் மோன் மொழிக்கும் அதனின் பண்பாட்டுக்கும் தொடர்ந்து ஆதரவு நிலைப்பாடுகளை அளித்தார்.
இவர் தனது தந்தை அனவ்ரஹ்தாவின் சிவேஜிகன் தூபியை கட்டி முடித்து, பின்பு ஆனந்த கோவிலையும் கட்டினார். இவரது ஆட்சிக்காலத்தில் பேகன் இராச்சியம் பௌத்த சமய கற்றலுக்கான முக்கிய இடமாக ஆனது. தென்கிழக்கு ஆசியாவில் கெமர் பேரரசுடன் இணைந்து பேகன் இராச்சியம் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்தது. சீனத்தை சேர்ந்த சொங் அரசமரபும், இந்தியாவை சேர்ந்த சோழ அரசமரபும் ஒரு இறையாண்மை இராச்சியமாக அங்கீகரித்தது.
கியான்சித்தா பர்மிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவர். அவரது வாழ்க்கைக் கதைகள் பர்மிய இலக்கியங்களும், நாடகங்களிலும், சினிமாவிலும் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coedès 1968: 155–157