கிம் ஜோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் ஜோன்
Kim Joon
김준
பிறப்புபெப்ரவரி 3, 1984 (1984-02-03) (அகவை 40)
பணிநடிகர்
பாடகர்
விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை
வலைத்தளம்
Kim Joon Twitter

கிம் ஜோன் (ஆங்கில மொழி: Kim Joon) (பிறப்பு: பெப்ரவரி 3, 1984) ஒரு தென் கொரிய நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ், என்ட்லேஸ் லவ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் 2014ஆம் ஆண்டு லுபின் III என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கிம் 2007ஆம் ஆண்டு ரி மாஸ் என்ற ஆண்கள் குழுவில் பாடகர் மற்றும் பாடல் எழுத்தாளராக கொரியன் பொழுதுபோக்கு துறையில் அறிமுகமானார். 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் என்ற தொடரில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார், அந்த தொடர் மிகவும் வெற்றி பெற்றது அந்த தொடரில் இவர் தனது குழுவுடன் பாடலும் பாடியுள்ளார். என்ட்லேஸ் லவ் (2014), சிட்டி ஒப் தி சன் (2015) போன்ற சில தொடர்களில் நடித்தார்.

2013ஆம் ஆண்டு இவர் நடித்த பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் என்ற தொடரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஜோன்&oldid=3239959" இலிருந்து மீள்விக்கப்பட்டது