கிமு 44
Appearance
நூற்றாண்டுகள்: | கிமு 2-ஆம் நூ - கிமு 1-ஆம் நூ - 1ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 50கள் - கிமு 40கள் - கிமு 30கள்
|
ஆண்டுகள்: | 47 46 45 - கிமு 44 - 43 42 41 |
ஆண்டு கிமு 44 (44 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், அல்லது திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு, அல்லது ஒரு வெள்ளி அல்லது சனிக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். அத்துடன் இவ்வாண்டு அக்காலத்தில் "சீசர் மற்றும் அந்தோனியின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Caesar and Antony) எனவும், "ஆண்டு 710" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 44 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
நிகழ்வுகள்
[தொகு]உரோமைக் குடியரசு
[தொகு]- ஆட்சியாளர்கள்: யூலியசு சீசர், மார்க் அந்தோனி
- மார்ச் 15 (நட்ட நடு மார்ச்சு) - ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.
- மார்ச் 20 - யூலியசு சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
- ஏப்ரல் - ஆகுஸ்டஸ் சீசர் சீசரின் வாரிசு உரிமையைத் திரும்பப்பெற ரோம் திரும்பினான்.
- ஏப்ரல் 18-21 - மார்க் அந்தோனியை எதிர்த்த சிசேரோ என்பவனுடன் ஆகுஸ்டஸ் போரை ஆரம்பித்தான்.
- ஜூன் - மார்க் அந்தோனி பிரான்சின் வடக்கு, மத்திய பகுதிக்கும் வடக்கு இத்தாலிக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஆளுநர் பதவியைப் பெற்றான்.
- செப்டம்பர் 2 - பார்வோன் ஏழாம் கிளியோபாட்ரா தனது மகன் பதினைந்தாம் தாலமியை (சிசேரியன்) சக ஆட்சியாளராக அறிவித்தாள்.
இறப்புகள்
[தொகு]- மார்ச் 15 - யூலியசு சீசர், ரோமன் குடியரசின் மன்னன் (பி. கிமு 100)
- சூலை 26 - எகிப்தின் பதினான்காம் தாலமி, பாரோ (பி. கிமு 60/கிமு 59)