கிமு 399
Appearance
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு கிமு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு கிமு 399 (399 BC) என்பது யூலியன் நாட்காட்டிக்கு முன்னரான உரோமை நாள்காட்டியில் ஓர் ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு ஓகிரினசு, லோங்கசு, பிரிசுகசு, சிக்கூரினசு, ரூபசு, பிலோ ஆகியோரின் ஆட்சி ஆண்டு (Year of the Tribunate of Augurinus, Longus, Priscus, Cicurinus, Rufus and Philo) எனவும் சில வேளைகளில் "ஆண்டு 355" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 399 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 15 — மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் கிரேக்க இளைஞர்களை தவறான பாதையில் இட்டுச் செல்லுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஏத்தன்ஸ் அதிகாரிகளினால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- மக்கெடோன் மன்னன் முதலாம் ஆர்ச்செலாஸ் கொல்லப்பட்டான்.
- எகிப்து மன்னன் அமீர்த்தியஸ் போர் ஒன்றில் கொல்லப்பட்டான். போரில் வென்ற முதலாம் நெஃபெரிட்டஸ் மன்னன் மெண்டெஸ் நகரைத் தலைநகராக்கினான்.
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 15 — சோக்கிரட்டீஸ், கிரேக்க தத்துவவியலாளர் (பி. கிமு 470)
- அமீர்த்தயூஸ், எகிப்து மன்னன்
- முதலாம் ஆர்ச்செலாஸ்