கிமிகோ ரகீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமிகோ ரகீம்
தனிநபர் தகவல்
முழு பெயர்கிமிகோ ரகீம்
சுட்டுப் பெயர்(கள்)கிமி
பிறப்புசனவரி 28, 1999 (1999-01-28) (அகவை 25)
கொழும்பு, இலங்கை
உயரம்167 செ.மீ
எடை55kg
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்
நீச்சல்பாணிகள்பின்புற நீச்சல், ப்ரீ ஸ்டைல் நீச்சல்

கிமிகோ ரகீம் ( Kimiko Raheem பிறப்பு ஜனவரி 28 ,1999 ) இலங்கையின் தேசிய நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் பல சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். 2016-ம் ஆண்டு ரியோ டீ ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் இலங்கை சார்பில் கலந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவு தங்கப் பதக்கங்கள் வென்ற இலங்கை பெண் இவராவார். இப்போட்டியில் பின்புற நீச்சல் மற்றும் ப்ரீ ஸ்டைல் நீச்சல் என்பவற்றில் பல தங்கப் பதக்கங்களை வென்றார்[1]. இவர் மயூமி ரகீம், மிசிகோ ரகீம் ஆகியோரின் இளைய சகோதரியும் ஆவார். மயூமி, மிசிகோ ஆகியவர்களும் தேசிய நீச்சல் பதிவுகளை நிகழ்த்தியுள்ளனர். 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுகளில் 100 மீட்டர் பின்புற நீச்சல் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானார்[2]. கிமிகோ ரகீம் தென்னாசிய, தேசிய போட்டிகளில் பல பதிவுகளை நிகழ்த்தியுள்ளார்.

தாய்லாந்தில் தான்யாபுர நீரியல்  பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுகிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நீச்சல் வீரர்களுக்கு வழங்கப்படும் ‘பினா’எனும் புலமைபரிசிலை பெற்றார். இலங்கையை சேர்ந்த மற்றுமொரு நீச்சல் வீரரான சரித்த டீ சில்வாவும் பினா அமைப்பினால் வழங்கப்படும் புலமைப்பரிசிலை பெற்றார். கிமிகோ புகட் நகரில் உள்ள சர்வதேச பாடசாலையில் கல்வி கற்றார். தற்சமயம் தாய்லாந்தில் அமைந்துள்ள ஐக்கிய உலக கல்லூரியில் உயர் கல்வியை தொடர்கின்றார். கிமிகோ இலங்கை, நியூசிலாந்து, கட்டார் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசித்துள்ளார்.

2018 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://newsfirst.lk/english/2016/02/sri-lankas-kimiko-raheem-sets-new-south-asian-games-record/127593 பரணிடப்பட்டது 2018-01-15 at the வந்தவழி இயந்திரம் இலங்கை செய்தி- நியுஸ் பெர்ஸ்ட் பார்த்த நாள் 15 பெப்ரவரி 2016
  2. http://www.sundaytimes.lk/141214/sports/kimiko-the-third-star-rising-from-rahim-131745.html பார்த்த நாள் 15 பெப்ரவரி 2016
  3. http://www.thepapare.com/know-your-swimmers-for-commonwealth-games-2018/ கொழும்பு இலங்கை பார்த்த நாள் 18 பெப்ரவரி 2018
  4. http://www.sundaytimes.lk/article/1039498/swimming-two-women-and-four-men-to-represent-sri-lanka-at-cwg-2018 www.thepapare.com. பார்த்த நாள் 18 மார்ச் 2018

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமிகோ_ரகீம்&oldid=3581010" இலிருந்து மீள்விக்கப்பட்டது