காவேரிப்பட்டிணம் சக்தி விநாயகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சக்தி விநாயகர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:காவேரிப்பட்டிணம்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:காலபைரவர்
சிறப்புத் திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி

காவேரிப்பட்டிணம் சக்தி விநாயகர் கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலாகும். இக்கோயில் காவேரிப் பட்டிணம் பேருந்து நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. இக்கோயில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முன் மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. இக்கோயில் ஐந்து நிலை விமானத்தைக் கொண்டுள்ளது. கோயில் கருவறையில் மூன்றடி உயர பிள்ளையார் சிலை அமைந்துள்ளது.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அப்போது மூன்று நாட்கள் விழா நடத்தப்படுகிறது. மூன்றாம் நாளில் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. பொங்கல் திருநாளன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 31-33.