கார்போ ஐதரசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்போ ஐதரசைடு
Structural formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-டையமினோயூரியா
இனங்காட்டிகள்
497-18-7 Yes check.svgY
ChEBI CHEBI:61308 Yes check.svgY
ChemSpider 66578 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 73948
பண்புகள்
CH6N4O
வாய்ப்பாட்டு எடை 90.09 கி/மோல்
அடர்த்தி 1.341 கி/செ.மீ3
உருகுநிலை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கார்போ ஐதரசைடு (Carbohydrazide) என்பது OC(N2H3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது வெண்மை நிறத்தில் நீரில் கரையக்கூடிய திண்மமாகக் காணப்படுகிறது [1][2]. சூடுபடுத்தி உருகும்போது கார்போ ஐதரசைடு சிதைவடைகிறது [2]. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட N-H குழுக்கள் பிற மாற்றீடுகளால் மாற்றப்பட்டு உருவாகும் பல கார்போ ஐதரசைடுகள் அறியப்படுகின்றன. அவை பெரும்பாலும் மருந்துகள், களைக்கொல்லிகள், தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாயப்பொருள்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

தயாரிப்பு[தொகு]

யூரியாவுடன் ஐதரசீனைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொழிற்சாலை அளவுகளில் கார்போ ஐதரசைடுகள் தயாரிக்கப்படுகின்றன :[3]

OC(NH2)2 + 2 N2H4 → OC(N2H3)2 + 2 NH3.

சி1 முன்னோடிகள் எனப்படும் கார்பனேட்டு எசுத்தர்களுடன் ஐதரசீனை வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்க முடியும் [2]. பாசுகீனிலிருந்தும் கார்போ ஐதரசைடைத் தயாரிக்க முடியும். ஆனால் இத்தயாரிப்பு வழிமுறையில் ஐதரசீனியம் உப்பும் [N2H5]Cl கூடவே இணையாக உற்பத்தியாகி அதன் விளைவாக டைபார்மைலேற்றம் நிகழ்கிறது.கார்பசிக் அமிலமும் பொருத்தமான ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.

N2NH3CO2H + N2H4 → OC(N2H3)2 + H2O

கட்டமைப்பு[தொகு]

சமதளமற்ற மூலக்கூறால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. அனைத்து நைட்ரசன் மையங்களும் குறைந்தபட்சம் பார்ப்பதற்கு கூர்நுனிக் கோபுரம் வடிவத்தைக் கொடுக்கின்றன. மேலும் அவை C-N பை-பிணைப்பை குறிக்கின்றன. கட்டமைப்பில் உள்ள C-N மற்றும் C-O பிணைப்பு இடைவெளிகள் முறையே 1.36 மற்றும் 1.25 Å, ஆகும் .[4].

தொழிற்துறை பயன்கள்[தொகு]

 • ஆக்சிசன் துப்புரவாக்கி: கொதிகலன்களில் உள்ள ஆக்சிசனை நீக்க கார்போ ஐதரசைடு பயன்படுகிறது. ஆக்சிசன் துப்புரவாக்கிகள் அரிப்பைத் தடுக்கின்றன [5][6].
 • பலபடி முன்னோடி: எப்பாக்சைடு வகை பிசின்களில் நீராற்றும் முகவராக கார்போ ஐதரசைடு பயன்படுகிறது [2]
 • புகைப்படத்தொழில்: வெள்ளி ஆலைடு விரவல் செயல்முறையில் அச்சுப் பொடிகளில் ஒன்றாக இது பயன்படுத்தப்படுகிறது. அசோமெத்தின், அசின் வகை பிம்பங்களை உருவாக்கும் நிற மேம்படுத்திகளை நிலைநிறுத்துவதில் கார்போ ஐதரசைடு பயன்படுகிறது [2].
 • வெடிபொருள் உந்திகள்[7], நிலைப்படுத்தி சோப்புகள், போன்றவற்றை மேம்படுத்துவதிலும் கரிமத் தொகுப்பு வினைகளில் வினைப்பொருளாகவும் கார்போ ஐதரசைடு பயன்படுகிறது.

தீங்குகள்[தொகு]

கார்போ ஐதரசைடை வெப்பப்படுத்துவதால் வெடித்தல் நிகழலாம். விழுங்க நேர்ந்தால் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். கண்கள், மூச்சுக் குழாய்கள் மற்றும் தோலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், கார்போ ஐதரசைடு நீர்வாழ் உயிரினங்களுக்கும் நச்சுத்தன்மையை அளிக்கிறது [8].

மேற்கோள்கள்[தொகு]

 1. Inorganic Syntheses Volume IV. McGraw-Hill Book Company, Inc.. 1953. பக். 35. https://books.google.com/books?id=sOSvnJmXh1cC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Kurzer, Frederick; Michael Wilkinson (February 1970). "Chemistry of carbohydrazide and thiocarbohydrazide". Chemical Reviews. doi:10.1021/cr60263a004. http://pubs.acs.org/doi/abs/10.1021/cr60263a004. 
 3. Jean-Pierre Schirmann, Paul Bourdauducq "Hydrazine" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2002. எஆசு:10.1002/14356007.a13_177.
 4. Ottersen, T.; Hope, H. "The Structure and Electron Deformation Density Distribution of Carbonohydrazide (Carbohydrazide) at 85 K" Acta Crystallographica B 1979, volume 35, p373-p378. எஆசு:10.1107/S0567740879003575
 5. Buecker, Brad (1997). Power Plant Water Chemistry A Practical Guide. PennWell Publishing Company. பக். 13–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87814-619-9. https://books.google.com/books?id=7PeSdVhFhxgC&pg=PA16&lpg=PA16&dq=carbohydrazide+oxygen+scavenger&source=bl&ots=HUgkHpZAeF&sig=8WpvSGqaMSNGV4XLtSpp-RrRCC0&hl=en&sa=X&ei=if10UJLGK4S09QSN5oH4Bg&ved=0CCEQ6AEwATgK#v=onepage&q=carbohydrazide%20oxygen%20scavenger&f=false. 
 6. "Patent US4269717". பார்த்த நாள் 8 October 2012.
 7. "Patent US2970899". பார்த்த நாள் 8 October 2012.
 8. "MSDS". பார்த்த நாள் 8 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போ_ஐதரசைடு&oldid=2640143" இருந்து மீள்விக்கப்பட்டது