காரைக்குடி சாம்பசிவ ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காரைக்குடி சாம்பசிவ ஐயர்
பிறப்பு1888
திருக்கோகர்ணம், தமிழ்நாடு
இறப்பு1958 (அகவை 69–70)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)வாத்யக்கருவி
இசைக்கருவி(கள்)வீணை
1952 இல் சாம்பசிவ ஐயர் இராசேந்திர பிரசாத்திடமிருந்து இசைக்கான விருதைப் பெறுகிறார்

காரைக்குடி சாம்பசிவ ஐயர் (Karaikudi Sambasiva Iyer) (1888 - 1958) , ஓர் இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர் மற்றும் ஒரு வீணை இசைக்கலைஞர் ஆவார். 1888 ஆம் ஆண்டுக்கும் 1958 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் வாழ்ந்தார். 1952 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதை வென்ற முதலாவது இசைக்கலைஞர் சாம்பசிவ ஐயர் ஆவார். இசை, நடனம், நாடகத்திற்கு இந்தியாவில் சங்கீத நாடக அகாதமியில் வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும் [1].

பிறப்பு[தொகு]

புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் என்னும் ஊரில் 1988 ஆம் ஆண்டு சாம்பசிவ ஐயர் பிறந்தார். வீனை வித்வான் சுப்பையா ஐயர் இவருடைய தந்தையார் ஆவார்.

இசைப்பயிற்சி[தொகு]

தன் தந்தை சுப்பையா ஐயரிடமும் மூத்த சகோதரர் சுப்ரமணி ஐயரிடமும் வீணை இசையைக் கற்றார். குடும்பத்தின் உயர்ந்த வீனா பாரம்பரியத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ள ஏழாவது தலைமுறையாக இந்த இருவரும் ஒன்று சேர்ந்தனர். சகோதர்ர்கள் இருவரும் இணைந்து "காரைக்குடி சகோதரர்களாக" 1934 ஆம் ஆண்டுவரை வீணை வாசித்தனர். சாம்பசிவ ஐயர் தன்னுடைய கடின உழைப்பால் அசுர சாதகர் என்று அறியப்படுகிறார். வீணையின் மீது அவருக்கு இருந்த தேர்ச்சியும் அவரது முன்னோர்களிடம் இருந்து பெற்ற இசையறிவும் ஐயருகு மிகவும் உதவின.

வாழ்க்கைப் பணி[தொகு]

சென்னை கலாசேத்திராவில் தங்கியிருந்த சாம்பசிவ ஐயர் ருக்மணிதேவி அவர்களால் இசை பயிற்றுவிக்கப்பட்டார்[2]. இசை நடனம் மற்றும் நாடகத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் சங்கீத நாடக அகாதமியின் மிக உயர்ந்த விருது 1952 இல் வீணை இசைக்காக சாம்பசிவ ஐயருக்கு வழங்கப்பட்டது [3]. இதே ஆண்டில் கர்நாடக இசைக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த சங்கீத கலாநிதி விருதையும் மெட்ராசு மியூசிக் அகாதமி இவருக்கு வழங்கியது [4].

1958 இல் சாம்பசிவ ஐயர் காலமானார்.

அவரது புகழ்பெற்ற சீடர்களில் டாக்டர் காரைக்குடி எசு. சுப்பிரமணியன், ராசேசுவரி பத்மநாதன் மற்றும் ரங்கநாயக்க ராஜகோபாலன் ஆகியோர் இவருடைய புகழ்பெற்ற சீடர்களாவர் [5].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]