காருடி கோம்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காருடி கோம்பே நடனத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகள்

காருடி கோம்பே என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நாட்டுப்புற நடனம் ஆகும். நடனக் கலைஞர்கள் மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்ட ராட்சத பொம்மைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். காருடி-கோம்பே என்ற சொல்லுக்கு தாய்மொழியான கன்னடத்தில் மந்திர பொம்மை என்று பொருள். இந்த நடனம் முக்கிய விழாக்களான, மைசூர் தசரா விழாவின் போது நடைபெறும் ஊர்வலத்தில் ஆடப்படுகிறது. இந்த நடனம் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் தத்திராய என்றும் அழைக்கப்படுகிறது. தத்திராய என்றால் மூங்கில் குச்சிகளால் ஆன பொம்மையை சுமப்பவர் என்று பொருள். [1]

தோற்றம்[தொகு]

ஒரு புராணத்தின் படி, இந்த நடனம் இந்து இதிகாசமான மகாபாரதத்தின் காலத்திலும் நிகழ்த்தப்பட்டது. இந்து கடவுளான பகவான் கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா தன் கணவர் மீது கோபமாக இருந்தபோது, அவர் காருடி கோம்பை பொம்மையை அணிந்து நடனமாடி அவரது கோபத்தைத் தணித்தார். [2]

பொம்மைகள் உருவாக்கம்[தொகு]

பொம்மையின் முகம் மரக் கூடையால் ஆனது, அதன் மீது காகிதக் கூழ் பூசப்படுத்தப்படுகிறது. பொருத்தமான ஓவியங்கள் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி, பொம்மையின் முகம் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு முகமும் ஒரு மரச்சட்டத்தால் தாங்கப்படுகிறது. பொம்மைகளின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்கலாம். மற்றும் சட்டத்துடன் சேர்த்து மொத்த எடை 40 கிலோவாக இருக்கலாம் [1] [2] ஒரு நபர் சட்டகத்தின் அடிப்பகுதியில் இருந்து, தன்னைப் பொருத்திக் கொண்டு, இந்த பிரமாண்டமான கட்டமைப்பை தோளில் சுமந்தவாறு நடனமாடுகிறார் [1] [2] கலைஞருக்கு சட்டத்தில் உள்ள ஒரு திறப்பு மூலம் வெளி உலகத்தைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடனம்[தொகு]

சுமந்து செல்லும் பொம்மைகள் அதிக எடை உடையவை என்பதால், பெரும்பாலும் ஆண் கலைஞர்களே இந்நடனத்தை ஆடுகிறார்கள். நடன நிகழ்ச்சி எட்டு மணி நேரம் வரை நீடிப்பதுண்டு. இதற்காகக் கலைஞர்கள் கனமான பொம்மைகளை சுமந்து செல்கிறார்கள். [2] ஒரு வேடிக்கையான சூழ்நிலையை உருவாக்குவதே இந்நடனத்தின் பின்னால் உள்ள முக்கிய நோக்கமாகும். எனினும், அவை தீய சக்திகளைத் தடுக்கும் ஒரு கலையாகவும் பார்க்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 A description of Gaarudi Gombe is provided by "Folk Arts - Music and Dance". Online webpage of udupipages.com. Shathabdi Graphics Pvt. Ltd. Archived from the original on 2007-01-02. பார்க்கப்பட்ட நாள் 2007-05-13."Folk Arts - Music and Dance". Online webpage of udupipages.com. Shathabdi Graphics Pvt. Ltd. Archived from the original on 2 January 2007. Retrieved 13 May 2007.
  2. 2.0 2.1 2.2 2.3 Legend related to the Gaarudi Gombe dance is mentioned by "On a high of music, dance medley". Online edition of the Times of India, dated 2003-12-12 (© 2007 Times Internet Limited). http://timesofindia.indiatimes.com/articleshow/354270.cms. "On a high of music, dance medley". Online edition of the Times of India, dated 2003-12-12. © 2007 Times Internet Limited. 12 December 2003. Retrieved 13 May 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காருடி_கோம்பே&oldid=3776380" இலிருந்து மீள்விக்கப்பட்டது