உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தி நினைவு நிறுவனம்

ஆள்கூறுகள்: 25°37′14″N 85°08′32″E / 25.6205°N 85.1422°E / 25.6205; 85.1422
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தி நினைவு நிறுவனம்
Gandhi Sangrahalaya is located in Patna
Gandhi Sangrahalaya
Gandhi Sangrahalaya
Location within Patna
நிறுவப்பட்டது1967 (1967)
அமைவிடம்காந்தி மைதானம், மேற்கு பகுதியில், பாட்னா, பீகார், இந்தியா
ஆள்கூற்று25°37′14″N 85°08′32″E / 25.6205°N 85.1422°E / 25.6205; 85.1422
வலைத்தளம்gandhisangrahalayapatna.org

காந்தி நினைவு நிறுவனம் (Gandhi Sangrahalaya, Patna) அல்லது காந்தி ஸ்மாரக் சங்க்ரஹாலயா என்பது இந்திய மாநிலம் பீகாரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் மற்றும் பொதுச் சேவை நிறுவனமாகும். இது மகாத்மா காந்தியின் வாழ்க்கை, கொள்கைகள் மற்றும் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் போது பீகாரில் காந்தியின் பங்கைக் காட்டுகிறது.[1] இது நாட்டில் உள்ள பதினொரு காந்தி அருங்காட்சியகங்களுள் ஒன்றாகும்.[2]

வரலாறு

[தொகு]

1948-ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, காந்திக்கு நினைவுச் சின்னங்களைக் கட்டுமாறு நாடு முழுவதும் இந்தியக் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தியாவின் ஏழை மற்றும் பணக்கார குடிமக்களின் பங்களிப்புகளின் உதவியுடன், மகாத்மா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டது.[3][4] இது பாட்னா சங்க்ரஹாலயா காந்தி மைதானத்தின் வடமேற்கு மூலையில் 1967-ல் நிறுவப்பட்டது.[5] . சூலை 1971 வரை, ஐந்து அருங்காட்சியகங்கள் (அகமதாபாத், மதுரை, பைரக்பூர், மும்பை, பாட்னா) நிறுவப்பட்டன. இதன் பின்னர் பாட்னாவின் காந்தி சங்கரஹாலயா ஒரு தன்னாட்சி நிறுவனமாக இருந்து வருகிறது.[6]

இந்த அருங்காட்சியகம் அமைதியான இடத்தில் அமைந்துள்ளது. இங்குப் புகைப்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் மேற்கோள்கள் அடங்கிய பாபுஜியின் காட்சி வாழ்க்கை வரலாறு உள்ளது. காந்தியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இங்கே கூறப்பட்டுள்ளன.[7] காந்தியின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவரது குழந்தைப் பருவத்தின் புகைப்படங்களைக் கொண்ட ஒரு பகுதியும் உள்ளது. இவரது அறையின் பிரதி ஒன்று அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த கட்டிடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை தொடர்பான புத்தகங்கள், பத்திரிகை, இலக்கியம் மற்றும் ஒலி-ஒளி பொருட்கள் மற்றும் புத்தகக் கடை ஆகியவை அடங்கிய நூலகமும் உள்ளது.[8]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Telegraph — Calcutta (Kolkata) | Bihar | CM sets Satyagraha archive ball roll". Telegraphindia.com. 2011-04-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  2. "Gandhi Museums, Ashrams and Libraries". Mkgandhi.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  3. Kaminsky (2011-09-23). India Today: An Encyclopedia of Life in the Republic [2 volumes]: An ... - Google Books. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  4. Peter Rühe. "MAHATMA — LIFE OF GANDHI, 1869-1948". Gandhiserve.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  5. "Govt to provide fund for Gandhi Sangrahalaya — The Times of India". Timesofindia.indiatimes.com. 2011-01-30. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  6. "Tribute to Gandhi". gandhisangrahalayapatna.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  7. "Directorate of Museum — Page 4". Yac.bih.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  8. "Tribute to Gandhi". gandhisangrahalayapatna.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_நினைவு_நிறுவனம்&oldid=3801841" இலிருந்து மீள்விக்கப்பட்டது