உள்ளடக்கத்துக்குச் செல்

மகாத்மா காந்தி சிலை, காந்தி மைதானம்

ஆள்கூறுகள்: 25°37′7″N 85°8′33″E / 25.61861°N 85.14250°E / 25.61861; 85.14250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாத்மா காந்தி
நின்ற நிலையில் இரு சிறுவர்களுடன் காந்தி
ஆள்கூறுகள்25°37′7″N 85°8′33″E / 25.61861°N 85.14250°E / 25.61861; 85.14250
இடம்காந்தி மைதானம், பாட்னா, பீகார், இந்தியா
வடிவமைப்பாளர்அனில் சுடர்
வகைசிலை
கட்டுமானப் பொருள்வெண்கலம்
உயரம்22 மீ
துவங்கிய நாள்2012
முடிவுற்ற நாள்2013
திறக்கப்பட்ட நாள்15 பிப்ரவரி 2013
அர்ப்பணிப்புமகாத்மா காந்தி

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை (Statue of Mahatma Gandhi, Gandhi Maidan) இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னமாகும். இந்த சிலையானது உலகில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தியின் சிலைகளில் மிக உயரமான வெண்கலச் சிலை ஆகும். இதனைப் பிப்ரவரி 15, 2013 அன்று பீகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமாரால் திறந்துவைக்கப்பட்டது.[1] இந்த சிலை பீகார் அரசால் 35 கோடி செலவில் நிறுவப்பட்டது.[2] இரண்டாவது மிக உயரமான காந்தி சிலை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா வட்டத்தில் துருவானூரில் அமைந்துள்ளது.

விளக்கம்

[தொகு]

இந்த சிலையானது 72 அடிகள் (22 m) உயரமானது. உயரமான 24 அடி பீடத்தில் அமைக்கப்பட்ட இச்சிலையானது வெண்கலத்தால் ஆனது. இது ராம் வி சூதார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இச்சிலை பாட்னாவில் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னால் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி மைதானத்தின் மேற்கு முனையில் அமைந்துள்ளது.[3] மகாத்மா காந்தி இரண்டு குழந்தைகளுடன் பாசத்துடன் நிற்பதாக இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தை இது காட்டுகிறது. 24அடி உயரப் பீடத்தில் காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளான, தண்டி உப்புச்சத்தியாகிரகம் (1930), வெளியேறு இந்தியா இயக்கம் (1942), சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகம் (1917) மற்றும் காந்தியின் அடையாளமாக நூற்புச் சக்கரம்ஆகியவை பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.[4]

இராம்சுதார் கலை நிறுவனம் நடத்தும் சிற்பி அனில், "புன்னகையுடன் காட்சியளிக்கும் காந்தி, உலக அமைதியின் செய்தியினையும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிரிவைக் குறைக்க அனைவரையும் ஊக்குவிக்கும்" என்றார்.[5]

படக்காட்சி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World's Tallest Statue of Mahatma Gandhi Unveiled in Patna". PatnaDaily.Com. 2013-02-15. Retrieved 2014-05-28.
  2. "Tallest Gandhi statue to be installed at Patna – The Times of India". Timesofindia.indiatimes.com. 2012-08-05. Retrieved 2014-05-28.
  3. "Gandhi vs Gandhi: Two statues of the Father of the Nation are getting differential treatment in Patna". PIYUSH KUMAR TRIPATHI. The Telegraph (Calcutta), Patna. 13 September 2013. Retrieved 29 May 2014.
  4. "Mahatma Gandhi's tallest statue unveiled – The Times of India". Timesofindia.indiatimes.com. 2013-02-16. Retrieved 2014-05-28.
  5. PTI (2013-02-15). "World's tallest Gandhi statue unveiled in Patna". The Hindu. Retrieved 2014-05-28.