காஞ்சனா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சனா கோட்டை என்பது இந்திய நாட்டின்மகாராட்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும். இந்த கோட்டை அசந்தா-சாத்மால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. [1] கோட்டை அமைந்துள்ள மலையின் உயரம் 1368 மீட்டர் அல்லது 4490 அடி ஆகும். கள்வன் என்பது இந்த மலையை சுற்றி அமைந்துள்ள கிராமத்தின் பெயர் ஆகும். [2]

வரலாறு[தொகு]

இக்கோட்டையின் நிலை நடுத்தர அளவிலான கோட்டை ஆகும். இக்கோட்டையின் உயரம் 4490 அடி ஆகும். இக்கோட்டையில் அமைந்துள்ள கிராமம் கல்வன் ஆகும். இக்கோட்டையானது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை கோலேதாயரர் பகுதிக்கு மேற்கே சுமார் 3.21 கிலோ மீட்டர் அல்லது இரண்டு மைல் தொலைவிலும், வடமேற்கே சந்தூர் மலை 16 கிலோ மீட்டர் அல்லது பத்து மைல் தொலைவிலும் அமைந்துள்ளதாக இக்கோட்டையினை பார்வையிட்ட கேப்டன் பிரிக்சு 1818 ஆம் ஆண்டில் விவரித்தார். இக்கோட்டையினை சுற்றி ஒரு பெரிய மலை மற்றும் அண்டை கோட்டையான கோலேதைர் கோட்டை விட மிகவும் செங்குத்தானதாக அமைந்துள்ளது. இக்கோட்டைக்கு செல்வதற்கு புனேவில் இருந்து தூரம் 270 கிலோ மீட்டர் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kanchan (Nashik)". Maharashtratourism.gov.in. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  2. "Forts in maharashtra - Nashik Region - Kanchana Fort". Nomadtrekkers.in. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சனா_கோட்டை&oldid=3774076" இலிருந்து மீள்விக்கப்பட்டது