காக் புல்

ஆள்கூறுகள்: 33°32′40″N 73°10′37″E / 33.54456730955717°N 73.17700220784891°E / 33.54456730955717; 73.17700220784891
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக் புல்
کاک پل
அதிகாரப் பூர்வ பெயர் காக் பாலம்
போக்குவரத்து கார்கள், பேருந்துகள், லாரிகள்
தாண்டுவது சோன் ஆறு
இடம் இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம்
பராமரிப்பு தலைநகர் மேம்பாட்டு ஆணையம், இசுலாமாபாத்து
அமைவு 33°32′40″N 73°10′37″E / 33.54456730955717°N 73.17700220784891°E / 33.54456730955717; 73.17700220784891

காக் புல் (Kak Pul) என்பது பாக்கித்தான் நாட்டின் இசுலாமாபாத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு பாலமாகும். இப்பாலம் இசுலாமாபாத்து நகரத்தின் விரைவுச்சாலையில் சோன் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.[1] இசுலாமாபாத்தில் நுழையும் வாகனங்களுக்கான நுழைவாயிலாக பாலம் செயல்படுகிறது.[2]

அமைவிடம்[தொகு]

இசுலாமாபாத்து நகரத்திலுள்ள விரைவுச்சாலையில் சோன் ஆற்றின் மீது காக் புல் பாலம் கட்டப்பட்டுள்ளது. சோன் நதி பாக்கித்தானின் போத்தோகர் பீடபூமி பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஆறாகும். சோன் ஆறு போத்தோகரில் பெரும்பகுதி நீரை வெளியேற்றுகிறது.

காக் புல் பாலம் அருகே உள்ள பிரபலமான இடங்களில் ஒன்று சிகாலா நகரம் ஆகும், இது பாக்கித்தான் தேசிய காவல்துறை அகாடமியின் இருப்பிடமாகும், பாக்கித்தானின் மிகப்பெரிய காவல்துறை பயிற்சி கல்லூரியாக இந்த அகாடமி கருதப்படுகிறது. பாதுகாப்பு வீட்டுவசதி ஆணையம் ; விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ; முகமது அலி சின்னா பல்கலைக்கழக வளாகம்; மற்றும் இசுலாமாபாத்தின் புறநகர் பகுதியான ஊமாத்து மாதிரி நகரம் ஆகியவையும் இப்பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rising level of Soan River panics people living nearby". The News International (in ஆங்கிலம்). 2020-09-04. பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
  2. "Islamabad police decide to seal entry points amid banned outfit's march". ARY News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-23. பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
  3. "Kahuta Road in shambles". The Express Tribune (in ஆங்கிலம்). 2020-11-15. பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்_புல்&oldid=3840530" இலிருந்து மீள்விக்கப்பட்டது