கவிதா ரமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா ரமணன்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
கல்விப் பின்னணி
கல்வி
முனைவர் பட்ட நெறியாளர்பால் துபியசு
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்

கவிதா ரமணன் (Kavita Ramanan) பிரெவுன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுக் கணித பேராசிரியராக பணிபுரியும் நிகழ்தகவு கோட்பாட்டாளரும் ஆவார்.

கல்வி மற்றும் பணி[தொகு]

ரமணன் இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையில் அனுராதா ரமணன் மற்றும் இயற்கணித ஜியோமீட்டர் எஸ். ரமணனுக்கு மகளாகப் பிறந்தார்.[1] ரமணன் 1992-இல் மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். இவள் 1996-இல் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுக் கணிதத்தில் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார்.[2]:{{{3}}} பால் டுபுயிசு மேற்பார்வையிடப்பட்ட இவரது ஆய்வுக் கட்டுரையானது, தொடர்பு வலையமைப்பிற்கான பயன்பாடுகளுடன், கட்டுப்படுத்தப்பட்ட செயல்முறைகளின் கட்டுமானம் மற்றும் பெரிய விலகல் பகுப்பாய்வு குறித்ததாகும்.[3]:{{{3}}}

டெக்னியனில் முனைவர் பட்ட பின் ஆய்வினை முடித்த பிறகு, இவர் 1997 முதல் 2002 வரை பெல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். மேலும் 2002 முதல் 2009 வரை கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் கணித அறிவியலில் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் 2010-இல் ஆசிரியப் பணிக்கு பிரவுனுக்குத் திரும்பினார்.[2]:{{{3}}}

அங்கீகாரம்[தொகு]

ரமணன் 2006-இல் பயன்பாட்டு நிகழ்தகவு சமூகத்தின் எர்லாங் பரிசை வென்றார்.[4]:{{{3}}} இவர் 2013-இல் கணித புள்ளியியல் நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]:{{{3}}} அமெரிக்கன் கணிதவியல் சங்கம்[6]:{{{3}}} மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை அறிவியல் கழகத்தின்[7]:{{{3}}} 2018 வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கணிதப் புள்ளியியல் நிறுவனத்தில் 2015ஆம் ஆண்டு மெடாலியன் விரிவுரையை "சீரற்ற வலையமைப்பின் எல்லையற்ற பரிமாண அளவிடுதல் வரம்புகள்" என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.[8]:{{{3}}} 2019-இல், ரமணன் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்கச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 2020ஆம் ஆண்டில், கவிதா ரமணன், "பிரவுன் பல்கலைக்கழகம், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பிரதிபலித்த செயல்முறைகள் மற்றும் சீரற்ற வலையமைப்பிற்கான பங்களிப்புகளுக்காக" என்ற மேற்கோளுடன் தொழிற்துறை மற்றும் பயன்பாட்டுக் கணிதத்திற்கான சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]

கவிதா 2020இல் குகன்கெய்ம் ஆய்வு நிதியினைப் பெற்றார்.[11] 2021-இல் அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] கவிதா 2021-இல் பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி சாதனை விருதினைப் பெற்றார்.[13] மேலும் இவர் 2021 வன்னேவர் புஷ் ஆசிரிய கூட்டாளிகளின் பாதுகாப்புத் துறையின் வகுப்பில் கலந்துகொள்ளப் பரிந்துரையில் இடம்பெற்றார்.[14] கவிதா சனவரி-சூன் 2022இல் கிளே கணித நிறுவனத்தில் மூத்த அறிஞராக நியமிக்கப்பட்டார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographies of Candidates 2014" (PDF). American Mathematical Society.
  2. 2.0 2.1 Curriculum vitae (PDF), archived from the original (PDF) on 2017-11-07, பார்க்கப்பட்ட நாள் 2017-11-04
  3. கணித மரபியல் திட்டத்தில் கவிதா ரமணன்
  4. Erlang Prize, INFORMS, பார்க்கப்பட்ட நாள் 2017-11-03
  5. "Ramanan named IMS Fellow", News from Brown, Brown University, April 25, 2013, பார்க்கப்பட்ட நாள் 2017-11-04
  6. 2018 Class of the Fellows of the AMS, American Mathematical Society, பார்க்கப்பட்ட நாள் 2017-11-03
  7. Fellows: Alphabetical List, Institute for Operations Research and the Management Sciences, archived from the original on 2019-05-10, பார்க்கப்பட்ட நாள் 2019-10-09
  8. "Medallion Lecture preview: Kavita Ramanan", IMS Bulletin, Institute of Mathematical Statistics, May 17, 2015, archived from the original on 2017-10-30, பார்க்கப்பட்ட நாள் 2017-11-04
  9. "AAAS".
  10. "SIAM Announces Class of 2020 Fellow". பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  11. "Guggenheim Fellowship in 2020".
  12. "New Members Elected in 2021". பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
  13. "Professor Kavita Ramanan receives a Distinguished Research Achievement Award". பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
  14. "2021 Class of Vannevar Bush Faculty Fellowship".
  15. "Kavita Ramanan | Clay Mathematics Institute". பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_ரமணன்&oldid=3888956" இலிருந்து மீள்விக்கப்பட்டது