நீர்மேல் நெருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கல்லுருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீர்மேல் நெருப்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. baccifera
இருசொற் பெயரீடு
Ammannia baccifera
L.
வேறு பெயர்கள்

Ammannia aegyptiaca Willd.

நீர்மேல் நெருப்பு அல்லது கல்லுருவி (Ammannia baccifera) அல்லது (AMMNIA VESICATORIUS)[சான்று தேவை] என்பது பூக்கும் தாவர வகையாகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஸ்பெயின் நாடாகும். அதிகமாக ஆசியா, அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளில் வளருகிறது. இது இசுரேல் நாட்டில் அழிந்து பட்ட ஒரு இனமாகக் கருதப்படுகிறது.[2] இத்தாவரம் மூலிகை மருத்துவத்திற்கு உகந்தது ஆகும்.

விளக்கம்[தொகு]

கல்லுருவியானது நல்ல சீதோசன நிலையில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. இது சாதாரணமாக இந்தியா முழுதும் சதுப்பு நிலங்களிலும் வளரும். வயல்களில் நெல் அறுவடைக்குப்பின் களையாகத் தென்படும் செடி இது. இதன் தாயகம் இந்தியா ஆகும். பின் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், சீனா, பிலிப்பீன்சு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் மலேசியா வரை பரவிற்று. கல்லுருவி ஒரு அடியிலிருந்து 2 அடி வரை வளரக்கூடியது. நேராக வளரும். சிறு கிளைகள் அதிகாக இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையானவை, நீளம் சுமார் 3.5 செ.மீ. இருக்கும். தண்டு சதுர வடிவில் அமைந்திருக்கும். இலை இடுக்குகளில் பூக்கள் பூத்திருக்கும். அதன் இதழ்கள் சுமார் 1.2 மி.மீ. நீலம் பச்சை அல்லது கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். சூலகம் வட்ட வடிவில் இருக்கும். இது தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும். விதைகள் கருப்பாக இருக்கும். கல்லுருவி விதைகள் மூலம் இன விருத்தி செய்கிறது.

மருத்துவப்பயன்கள்[தொகு]

கல்லுருவி இலைகள் புண்களைப் போக்க வல்லது. விடத்தைக் குணப்படுத்தும். காச்சலைப் போக்கும். புற்றுநோயால் அழியும் செல்களைப் புதுப்பிக்கும் தன்மையுடையது. மேலும் இது பற்றி பல ஆராய்ச்சிகள் மேல் நாட்டில் செய்து கொண்டுள்ளார்கள். இந்த மூலிகையை இனம் காண்பதில் சில சிக்கல்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கல்லுருவிப் பூண்டு பலகட்டிகளையுங் கரைக்கும் வல்லுதிரக் கட்டருக்கும் வந்தபுண்ணை வெல்லரிய மேகத் தைவல் விடத்தை நீறாத கற்றிடும் லோகத்தைச் சுத்தி செய்யும் போது

கல்லுருவி மூலிகை இலையை அரைத்து தோலில் தடவ கொப்பளக் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன் இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக் கட்ட நஞ்சு முறியும். தேள் கடி விடத்தையும் முறிக்கும். இரத்தத் துடிப்பகற்றும்.

வண்டு கடிக்கு இதன் இலைச்சாற்றை பூசினால் குணமடையும், இதன் இலைகளில் ‘சி’ வைட்டமின் உள்ளது, இதன் இலைச்சாற்றை உடல் மீது தடவினால் தோல் வியாதி குணமடையும், காச்சலும் குணமடையும், உண்ணும் உணவுடன் இதன் இலைச்சாறு கலந்து விட்டால் அடிவயிற்றில் எரிச்சல் ஏற்படும் எனவே கவனத்துடன் கையாள வேண்டும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:IUCN2014.1
  2. http://www.iucnredlist.org/details/164484/0
  3. Rhazi, L.; Rhazi, M. & Flannagan, D. (2014). "Ammannia baccifera". IUCN Red List of Threatened Species. Version 2014.1. International Union for Conservation of Nature. Retrieved 29 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்மேல்_நெருப்பு&oldid=2429850" இலிருந்து மீள்விக்கப்பட்டது