கல்கா குகைக் கோயில்
கல்கா குகைக் கோயில் | |
---|---|
கல்கா குகைக் கோயிலின் தோற்றம் | |
அமைவிடம் | |
நாடு: | பாக்கித்தான் |
மாநிலம்: | சிந்து மாகாணம் |
மாவட்டம்: | சுக்கூர் மாவட்டம் |
அமைவு: | ஆரோர் |
ஆள்கூறுகள்: | 27°37′33.8″N 68°55′51.3″E / 27.626056°N 68.930917°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோவில் |
கல்கா தேவி கோயில், கல்கா தேவி குகைக் கோயில், கல்கா தேவி மந்திர் என்று அழைக்கபடுவது பாக்கித்தானில் உள்ள ஒரு இந்துக் கோயில்களில் ஒன்றாகும். இது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் அரோரில், கல்கா மலையில் உள்ள ஒரு இயற்கையான குகைக்குள் [1] அமைந்துள்ளது. [2] [3] இந்தக் கோயில் கல்கா தேவியின் ஆஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது இந்துக்களாலும், இசுலாமியர்களாலும் பார்வையிடப்படுகிறது. [4] இந்தியாவில் இருந்து இந்துக்களும் இங்கு வருகை தருகின்றனர். [5] இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். [6]
முக்கியத்துவம்
[தொகு]பாக்கித்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும். [7] தொன்மத்தின் படி, கல்கா தேவி ஹிங்லாஜ் மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த இடத்திற்கு வந்தார். கோயிலின் பராமரிப்பாளரின் கூற்றுப்படி, கல்கா குகை கோவிலில் இருந்து ஹிங்லாஜ் மாதா கோயிலை இணைக்கும் இரண்டு சுரங்கங்கள் உள்ளன என்கிறார். [8]
இந்தக் கோயில் காளி தேவிக்காக அமைக்கபட்டுள்ளது. கல்கா என்ற சொல்லுக்கு ஷஷ்டி மொழியில் சக்தி என்று பொருள். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை மாலையில் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Farooq Soomro (23 December 2014). "Where the city of Aror once stood in glory". Dawn. https://www.dawn.com/news/1152687.
- ↑ Farooq Soomro (23 December 2014). "Where the city of Aror once stood in glory". Dawn. https://www.dawn.com/news/1152687.
- ↑ Rumana Husain (29 May 2016). "Kot Diji, Arore and a bit of Sukkur". The News. https://www.thenews.com.pk/tns/detail/561018-kot-diji-arore-sukkur.
- ↑ Salman Ali (19 November 2017). "Temple reflections — Asthan of Kalka Devi". Daily Times. https://dailytimes.com.pk/136177/temple-reflections-asthan-kalka-devi/.
- ↑ "SUKKUR: Indian pilgrims worship at Sadh Belo, Arore Temple". Dawn. 7 December 2006. https://www.dawn.com/news/222172/sukkur-indian-pilgrims-worship-at-sadh-belo-arore-temple.
- ↑ Essa malik, Munira Abbas (23 January 2015). "Discovering Sindh". https://tribune.com.pk/story/826576/discovering-sindh?amp=1.
- ↑ Budhaditya Bhattach (28 July 2014). "Monumental effort". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/reema-abbasis-historic-temples-of-pakistan-a-call-to-conscience-presents-a-side-of-pakistan-not-many-would-be-familiar-with/article6252711.ece.
- ↑ Farooq Soomro (23 December 2014). "Where the city of Aror once stood in glory". Dawn. https://www.dawn.com/news/1152687.
- ↑ Salman Ali (19 November 2017). "Temple reflections — Asthan of Kalka Devi". Daily Times. https://dailytimes.com.pk/136177/temple-reflections-asthan-kalka-devi/.