கலியன் வானமாமலை ஜீயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை மடத்தின் 30வது ஜீயராக 1994-இல் பட்டம் ஏற்றுக் கொண்டவர் கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர். மணவாளமாமுனி சுவாமிகள் வானமாமலை மடத்தின் ஜீயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[1].

சிறப்பு[தொகு]

கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் பல்வேறு வேத நூல்களுக்கும், நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கும் விளக்க உரைகள் எழுதியுள்ளார். திருக்குறளை சமசுகிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார்.[2] வானமாமலை ஜீயர் மடத்தின் 30-வது ஜீயர் சுவாமியாக 1994-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்- சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.[3]

முக்தி அடைதல்[தொகு]

82 வயதான கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் மே 11, 2014-இல் மரணமடைந்தார். அவரது உடல் நாங்குனேரி ஜீயர் மடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, ஜீயர் சுவாமியின் உடல் தேரில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, நாங்குனேரியில் உள்ள திருவரசுவில் ஜீவசமாதியாக வைக்கப்பட்டுள்ளது.[4]

புதிய ஜீயர்[தொகு]

வானமாமலை மடத்தின் புதிய ஜீயராக நாங்குநேரியைச் சேர்ந்த நாராயணன் (வயது 67) என்பவர், ‘மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர்‘ என்ற பெயரில் மடத்தின் 31வது ஜீயராக பொறுப்பேற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.srivaishnava.org/focus/iss1.htm
  2. http://www.dailythanthi.com/2014-05-03-cm-jeyalalitha-condolences-the-jeeyars-death
  3. http://jayanewslive.com/tamilnadu/tamilnadu-nellai-jeeyar-death_19321.html
  4. jayanewslive.com/tamilnadu/tamilnadu-nellai-jeeyar-death_19321.html
  5. நாங்குநேரி வானமாமலை மடம் புதிய ஜீயர் சுவாமிகள் பட்டணப்பிரவேசம்

வெளி இணைப்புகள்[தொகு]