கலியன் வானமாமலை ஜீயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை மடத்தின் 30வது ஜீயராக 1994-இல் பட்டம் ஏற்றுக் கொண்டவர் கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர். மணவாளமாமுனி சுவாமிகள் வானமாமலை மடத்தின் ஜீயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[1].

பிறப்பு[தொகு]

கலியன் வானமாமலை ஜீயர் வானமாமலையில் உ. வே.சீனிவாச ஐயங்கார், அலமேலு அம்மாள் ஆகியோரின் மகனாக 22 நவம்ப்ர் 1932 அன்று பிறந்தார். இவரின் தந்தையார் வேதவாத்தியாராகவும், சதுஸ்சாஸ்திரங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். மேலும் இவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியின் நெருங்கிய நண்பராக இருந்தார். கலியன் வானமாமலை ஜீயர் தன் தந்தையிடமே தமிழ், வடமொழி இலக்கியங்களை பயின்றார். மேலும் அலகாபாத் பல்கலைக் கழகத்தின் சாகித்யரத்தன் என்ற இந்தி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

சிறப்பு[தொகு]

கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் பல்வேறு வேத நூல்களுக்கும், நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கும் விளக்க உரைகள் எழுதியுள்ளார். திருக்குறளை சமசுகிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார்.[2] வானமாமலை ஜீயர் மடத்தின் 30-வது ஜீயர் சுவாமியாக 1994-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்- சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.[3] இவர் நான்கு மொழிகளில் தன் படைப்புகளை எழுதியுள்ளார். சாணக்கியன், வி.எஸ்.எஸ். எழிலரசன், குழகர்கோ ஆகிய புனை பெயர்களில்எழுதியுள்ளார்.

முக்தி அடைதல்[தொகு]

82 வயதான கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் மே 11, 2014-இல் மரணமடைந்தார். அவரது உடல் நாங்குனேரி ஜீயர் மடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, ஜீயர் சுவாமியின் உடல் தேரில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, நாங்குனேரியில் உள்ள திருவரசுவில் ஜீவசமாதியாக வைக்கப்பட்டுள்ளது.[4]

புதிய ஜீயர்[தொகு]

வானமாமலை மடத்தின் புதிய ஜீயராக நாங்குநேரியைச் சேர்ந்த நாராயணன் (வயது 67) என்பவர், ‘மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர்‘ என்ற பெயரில் மடத்தின் 31வது ஜீயராக பொறுப்பேற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.srivaishnava.org/focus/iss1.htm
  2. http://www.dailythanthi.com/2014-05-03-cm-jeyalalitha-condolences-the-jeeyars-death
  3. http://jayanewslive.com/tamilnadu/tamilnadu-nellai-jeeyar-death_19321.html
  4. jayanewslive.com/tamilnadu/tamilnadu-nellai-jeeyar-death_19321.html
  5. நாங்குநேரி வானமாமலை மடம் புதிய ஜீயர் சுவாமிகள் பட்டணப்பிரவேசம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலியன்_வானமாமலை_ஜீயர்&oldid=3759923" இலிருந்து மீள்விக்கப்பட்டது