கலிபோர்னியா குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலிபோர்னியா குடியரசு
República de California
ஏற்கப்படாத நாடு

சூன் – சூலை 1846
 


கரடிக் கொடி

தலைநகரம் சோனோமா, கலிபோர்னியா
மொழி(கள்) எசுப்பானியம், உள்ளக மொழிகள், ஆங்கிலம்.
அரசாங்கம் குடியரசு (அரசு)
படைத்தலைவர்
 -  1846 வில்லியம் பி. ஐடு
வரலாறு
 -  மெக்சிக்கோவிடமிருந்து விடுதலை அறிவிக்கப்பட்ட நாள் சூன் 14 1846
 -  அமெரிக்க ஆயுதப் படைகளால் சோனோமா, கலிபோர்னியா கைப்பற்றப்படுதல் சூலை 9 1846

கலிபோர்னியா குடியரசு ( California Republic, எசுப்பானியத்தில் "República de California"), அல்லது கரடிக் கொடி குடியரசு (Bear Flag Republic) சுருங்க கரடிக் குடியரசு (Bear Republic) என மெக்சிக்கோவின் ஆளுகைக்குட்பட்ட ஆல்ட்டா கலிபோர்னியா பகுதியில் குடியேறியிருந்த அமெரிக்கர்கள் மெக்சிக்கோவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த கால கலிபோர்னியா குறிப்பிடப்படுகிறது. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் துவங்கிய செய்தி எட்டும் முன்னரே சூன் 14, 1846இல் சோனோமாவில் புரட்சி அறிவிக்கப்பட்டது. மெக்சிக்கோவிலிருந்து விடுதலை பெற்றதாக புரட்சியாளர்கள் அறிவித்தபோதும் செயல்படக்கூடிய மாற்று அரசு எதுவும் உருவாகவில்லை. எனவே "குடியரசு" எவ்வித அதிகாரத்தையும் செயற்படுத்தவில்லை; எந்த நாட்டாலும் ஏற்கப்படவில்லை. பெரும்பாலான ஆல்ட்டா கலிபோர்னியப் பகுதிகள் இந்தப் புரட்சி பற்றி அறிந்திருக்கவில்லை. இந்தப் புரட்சி 26 நாட்களே நீடித்தது. அதன் பின்னர் அமெரிக்கப் படைகள் இப்பகுதியை ஆக்கிரமித்தன.ஐக்கிய அமெரிக்கா இப்பகுதியை உரிமை கொண்டாடுவதை அறிந்த புரட்சியாளர்கள் தங்கள் குடியரசை கலைத்து அமெரிக்க அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டனர்.

இந்தக் குடியரசுக் காலத்தில் உருவாக்கப்பட்ட " கரடிக் கொடி", பின்னாளில் கலிபோர்னியா மாநிலத்தின் கொடியில் ஒருங்கிணைக்கப்பட்டது.