உள்ளடக்கத்துக்குச் செல்

சோனோமா, கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகர மையத்தில் உள்ள சோனோமா நகரமன்ற கட்டிடம்

சோனோமா (Sonoma) அமெரிக்காவின், கலிபோர்னியாவில் சோனோமா கவுண்டியில் சோனோமா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் வரலாற்று சிறப்புமிகு நகரமாகும். மெக்சிக்கோவின் குடியேற்றத்தை நினைவுறுத்தும் வரலாறுடைய நகரமையத்தை சுற்றி அமைந்துள்ள இந்த நகரம் சிறிது காலமே இருந்த கலிபோர்னியக் குடியரசின் தலைநகரமாக விளங்கியது. இன்று கலிபோர்னியா மாநில திராட்சைமது தொழிலின் மையமாக விளங்குகிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற சோனோமா பன்னாட்டுத் திரைப்பட விழா இங்கு நடத்தப்படுகிறது. 2010 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 10,648 ஆக இருந்தது. சோனோமா ஊரகப் பகுதியின் மக்கள்தொகை 32,678 ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனோமா,_கலிபோர்னியா&oldid=2541273" இலிருந்து மீள்விக்கப்பட்டது