கர்னல் கணேசன்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கர்னல் கணேசன் | |
---|---|
பணி | இராணுவ பணியாளர் |
கர்னல் கணேசன் (Colonal Ganesan) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்து, இப்புவிப் பந்தின் தென் துருவத்தில் உள்ள இந்தியாவின் தட்சிண் கங்கோத்ரி ஆய்வுக் குழுவின் தலைவராய், சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் செலவிட்டவர். இந்தியப் படைத்துறையில் இணைந்து இரண்டு போர்களில் பங்குபற்றியவர். குடியரசுத் தலைவரின் விசிட்ட சேவா பதக்கம் பெற்றவர்.
பிறப்பு
[தொகு]திருவாரூர் மாவட்டத்தில், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள சன்னா நல்லூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் பாவாடை, தெய்வானை தம்பதியினர் ஆவார்.[1]
படிப்பு
[தொகு]பொறியியல் படித்தவர். பொதுப் பணித் துறையில் பணியாற்றியவர்
இராணுவம்
[தொகு]1963 ஆம் ஆண்டு பொதுப் பணித் துறைப் பொறியாளர் பதவியினைத் துறந்து விட்டு, இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்.[2] 30 ஆண்டுகால இராணுவ வாழ்வில், குஜராத், இராஜஸ்தான் முதல் ஜம்மு காஷ்மீர், இந்திய நேபாள எல்லை, பின்னர் இந்தியாவின் வடகிழக்கில், இந்திய சீன எல்லைப் பகுதிகளிலும் பணியாற்றியவர்.
விழுப்புண் விருது
[தொகு]இரண்டு இந்தியப் போர்களில் பங்கு பெற்று விழுப்புண் விருது பெற்றவர்[3]
அண்டார்டிகா பணி
[தொகு]1987 ஆம் ஆண்டு இந்திய தென்துருவ ஆராய்ச்சித் தளமான தட்சிண் கங்கோத்ரி ஆராய்ச்சித் தளத்தின் தலைவராய் பொறுப்பேற்று இரண்டு கோடை காலம், ஒரு குளிர் காலம் என ஒன்றரை ஆண்டுகளை தென் துருவத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டவர்.
குடியரசுத் தலைவர் விருது
[தொகு]1994 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் குடியரசுத் தலைவரின் விசிட்ட சேவா பதக்கம் பெற்றவர்[4]
அறிவுத் திருக்கோயில்
[தொகு]தென் துருவத்தில் 500 மீட்டர் ஆழத்தில் புதைந்திருந்த, சூரிய ஒளியினையே கண்டிராத, ஒரு பெரும் கல்லினை எடுத்து வந்து, சன்னா நல்லூரில், ஒரு தூணின் உச்சியில் அமர்த்தி, அறிவுத் திருக்கோயில் என்னும் பெயரில், அகத்தூண்டுதல் பூங்கா ஒன்றினை நிறுவியுள்ளார்