கர்நாடக மாநில நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நாடக ராஜ்யோத்சவா
ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯೋತ್ಸವ
மாநில நாளன்று டொல்லு குனிதா என்ற பாரம்பர்ய நடனமாடும் பெண்கள்
பிற பெயர்(கள்)கன்னட ராஜ்யோத்சவா, கர்நாடகம் உருவான நாள்
கடைபிடிப்போர்இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கன்னடியர்கள் [1]
வகைமாநிலம்
முக்கியத்துவம்தென்னிந்தியாவில் கன்னடம் பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து கர்நாடக மாநிலம் உருவாதல்
கொண்டாட்டங்கள்கன்னடக் கொடியை ஏற்றுதல், ஊர்வலங்கள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், ராஜ்யோத்சவா விருதுகள்[2]
நாள்நவம்பர் 1

கர்நாடக மாநில நாள் (Karnataka Formation Day) அல்லது (கர்நாடக/கன்னட மாநிலம் உருவான நாள் என்று பொருள்படும்) கர்நாடக / கன்னட ராஜ்யோத்சவா (கன்னடம்: ಕನ್ನಡ ರಾಜ್ಯೋತ್ಸವ) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. கன்னட மொழி பேசும் தென்னிந்தியாவின் பகுதிகளை ஒருங்கிணைத்து இதே நாளில் 1956ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவானதை இந்நாள் கொண்டாடுகிறது.[3]

கொண்டாட்டங்கள்[தொகு]

கன்னடக் கொடி.

கர்நாடக மாநிலத்தில் இந்த நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4] மேலும் உலகெங்கும் உள்ள கன்னடியர்களும் இந்த நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொண்டாடுகிறார்கள்.[1] மாநில முதல்வரும் ஆளுனரும் கன்னடக் கொடியை ஏற்றி உரையாற்ற கர்நாடக மாநில அரசு ராஜ்யோத்சவா விருதுகளை வழங்குவதுடன் [5] சமூக விழாக்கள், இசைக்குழுக்கள், கன்னட நூல்கள் வெளியீடு, பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்கிறது.[6]

காலக்கோடு[தொகு]

  • 2014: 2014-ஆம் ஆண்டில் 59-வது விழா கொண்டாடப்படுகிறது. கன்னடத் திரையுலகைச் சேர்ந்த 59 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.[7]

தொடர்புடையவை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_மாநில_நாள்&oldid=3547954" இருந்து மீள்விக்கப்பட்டது