கர்நாடக மாநிலப் பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜய பாரத ஜனனிய தனுஜாதெ என்பது குவெம்பு என்ற கன்னடப் புலவர் 1928 இல் எழுதிய பாடல். இது இந்தியாவின் கர்நாடகாவின் மாநில கீதமாக 2004 இல் ஏற்கப்பட்டது. [1] இப்பாடலில் இந்தியாவின் மகளான கர்நாடகா தன் மதிப்பை காத்துக்கொள்ளும் அதே வேளை, பிற மாநிலங்களுடன் அமைதியான உறவை மேற்கொள்வதாக குவெம்பு எழுதியுள்ளார். மாநிலத்தில் அனைத்து நிகழ்வின்போதும் இப்பாடலை இசைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு ஆணையிட்டுள்ளது. பாடலின்போது, அங்கிருப்போர் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது

பாடல் வரிகள்[தொகு]

கன்னடப் பாடல்
(தமிழ் எழுத்துகளில்)
பாடலின் பொருள்
ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
ஜய ஹே கர்னாடக மாதெ!
ஜய ஸுந்தர நதி வனகள நாடே,
ஜய ஹே ரஸருஷிகள பீடெ!
ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
ஜய ஹே கர்னாடக மாதெ! பூதேவிய மகுடத நவமணியெ,
கந்தத சந்தத ஹொன்னின கணியெ;
ராகவ மதுஸூதனரவதரிஸித
பாரத ஜனனிய தனுஜாதெ ! ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
ஜய ஹே கர்னாடக மாதெ! ஜனனிய ஜோகுள வேதத கோஷ,
ஜனனிகெ ஜீவவு நின்னாவேஸ,
ஹஸுரின கிரிகள ஸாலே,
நின்னய கொரளின மாலெ,
கபில பதஞ்ஜல கௌதம ஜினனுத,
பாரத ஜனனிய தனுஜாதெ !
ஜய ஹே கர்னாடக மாதெ! ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
ஜய ஹே கர்னாடக மாதெ!
ஸங்கர ராமானுஜ வித்யாரண்ய,
பஸவேஸ்வர மத்வர திவ்யாரண்ய
ரன்ன ஷடக்ஷரி பொன்ன,
பம்ப லகுமிபதி ஜன்ன
குமாரவ்யாஸர மங்கள தாம,
கவி கோகிலெகள புண்யாராம
நானக ராமா நந்த கபீரர
பாரத ஜனனிய தனுஜாதெ !
ஜய ஹே கர்னாடக மாதெ! ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
ஜய ஹே கர்னாடக மாதெ!
தைலப ஹொய்ஸளராளித நாடே,
டங்கண ஜகணர நெச்சின பீடெ
க்ருஷ்ண ஸராவதி துங்கா,
காவேரிய வர ரங்கா
சைதன்ய பரமஹம்ஸ விவேகர,
பாரத ஜனனிய தனுஜாதெ !
ஜய ஹே கர்னாடக மாதெ! ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
ஜய ஹே கர்னாடக மாதெ!
ஸர்வ ஜனாங்கத ஸாந்திய தோட,
ரஸிகர கங்கள ஸெளெயுவ நோட
ஹிந்தூ க்ரைஸ்த முஸல்மான,
பாரஸிக ஜைனருத்யான
ஜனகன ஹோலுவ தொரெகள தாம,
காயக வைணிகராராம
கன்னட நுடி குணிதாடுவ கேஹ,
கன்னட தாயிய மக்கள தேஹ பாரத ஜனனிய தனுஜாதெ,
ஜய ஹே கர்னாடக மாதெ
ஜய ஸுந்தர நதி வனகள நாடே,
ஜய ஹே ரஸருஷிகள பீடெ!
ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
ஜய ஹே கர்னாடக மாதெ!
இந்தியத் தாயின் மகளான
கர்நாடகத் தாய்க்கு வெற்றி!
அழகிய ஆறுகளும் காடுகளும் நிரம்பிய நிலமே, முனிவர்களின் இருப்பிடமே.
கர்நாடகத் தாயே வெற்றி!
இந்தியத் தாயின் மகளான
கர்நாடகத் தாய்க்கு வெற்றி!
பூமிதேவியின் புதிய அணிகலன் நீ!
தங்கம், சந்தனம் ஆகியவற்றின் சுரங்கம் நீ!
ராமரும் கிருஷ்ணரும் வாழ்ந்த
இந்தியாவின் மகளான கர்நாடகாவிற்கு வெற்றி!
வேதங்களின் எதிரொலியே உனக்கு தாலாட்டு!
பசுமையான மலைத் தொடர்கள் உனக்கு கழுத்தணி!
கபிலர், பதஞ்சலி, கவுதமர், ஜினர் ஆகியோர் போற்றிய
இந்தியாவின் மகளே, உனக்கு வெற்றி!
சங்கரர், ராமானுசர், வித்யாரணியர், பசவேசுவர மத்வாச்சாரியர்
ஆகியோர் வாழ்ந்த புனிதக் காடு நீ!
ரன்னா, சடக்சரி, பொன்னா, பம்பா, லக்சுமிச, ஜன்னா
ஆகியோர் பிறந்த புனித நிலமே!
கவிக்குயில்களின் துயிலிடமே!
நானக், ராமானந்தா, கபீர் ஆகியோர் பிறந்த
இந்தியாவின் மகளே, உனக்கு வெற்றி!
தைலப்பரும், ஹொய்சாளரும் ஆண்ட நிலம் இது!
டங்கண்ணா, ஜக்கண்ணா ஆகியோரின் தாய்மண்.
கிருஷ்ணா, சிரவதி, துங்கா, காவேரி ஆகிய
ஆறுகள் ஓடும் ஆசிர்வதிக்கப்பட்ட நிலம் இது!
சைதன்யர், பரமகம்சர், விவேகானந்தர் ஆகியோர் பிறந்த
இந்தியாவின் மகளே, கர்நாடகத் தாயே, உனக்கு வெற்றி!
அனைத்து சமூகத்தினரும் மகிழ்ந்து,
ஒன்றுகூடி வாழும் அமைதித் தோட்டம் இதுவே!
இங்கே இந்துக்களும், கிறித்தவர்களும், இசுலாமியர்களும்
பாரசீகத்தவரும், ஜைனரும் வாழுகின்றனர்.
பேரரசர்களின் அரண்மனையே!
இசைக் கலைஞர்கள், பாடகர்களின் வாழிடமே!
கன்னடத் தாயின் மகிழ்ந்திருக்கும் இருப்பிடமே!

இந்தியாவின் மகளே, கர்நாடகத் தாயே, உனக்கு வெற்றி!

அழகிய ஆறுகளையும், காடுகளையும் கொண்ட நிலத்தைப் போற்றுவோம்.
ராசரிசிகளின் இருப்பிடத்தைப் போற்றுவோம்.
இந்தியத் தாயின் மகளான
கர்நாடகத் தாய்க்கு வெற்றி!

சான்றுகள்[தொகு]

  1. சந்தன் கவுடா (2017 ஆகத்து 7). "கர்நாடகா முன்வைக்கும் கொடி அரசியல்!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_மாநிலப்_பண்&oldid=2397517" இருந்து மீள்விக்கப்பட்டது