உள்ளடக்கத்துக்குச் செல்

கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவை
உருவாக்கம்1901
13 மார்ச் 1978
தலைமையகம்ஸ்டாக்ஹோம், சுவீடன்
உறுப்பினர்கள்
50 உறுப்பினர்கள்
பெருந்தலைவர்
ஜெஸ்பர் ஹெக்ஸ்டோர்ம்
துணைப் பெருந்தலைவர்
இவா ஹெல்ஸ்டோர்ம் லிங்டுபெர்க்
வலைத்தளம்www.nobelprizemedicine.org

கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோபல் பேரவை (Nobel Assembly at the Karolinska Institute) சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா மையத்தில் அமைந்துள்ளது. கரோலின்ஸ்கா நிறுவனத்தின் பேராசிரியர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 உறுப்பினர்களைக் கொண்ட நோபல் பேரவை செயல்படுகிறது.[1]

கரோலின்ஸ்கா மையத்தில் செயல்படும் நோபல் பேரவையிலிருந்து, நோபல் குழு எனும் ஆலோசனைக் குழுவை நியமிக்கிறது. இக்குழுவே மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெறத் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.[2][3]

ஆல்ஃபிரட் நோபல் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில், உடலியல் அல்லது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுகிறது. முதலில் கரோலின்ஸ்கா நிறுவனத்தில் செயல்படும் நோபல் பேரரவை, உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறது. நேபல் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று ஸ்டாக்ஹோம் கூட்ட அரங்கில் நடைபெறும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]