கருப்பரான மோசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருப்பரான புனித மோசே
கருப்பரான புனித மோசே
பிறப்பு330
எகிப்து
இறப்பு405
ஸ்கேடீஸ், எகிப்து
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
முக்கிய திருத்தலங்கள்பரோமேயோஸ் மடம் எகிப்து
திருவிழாஆகஸ்ட் 28
ஜூலை 1
பாதுகாவல்ஆப்பிரிக்கா, அறப் போராட்டம்


கருப்பரான மோசே (330–405), (கொள்ளைக்காரான மோசே அல்லது எத்தியோப்பியரான மோசே) என்பவர் நான்காவது நூற்றாண்டின் எகிப்தில் வாழ்ந்த கடும் தவம் செய்த துறவியும் கத்தோலிக்க குருவும் குறிப்பிடத்தக்க பாலைவனத் தந்தையருள் ஒருவரும் ஆவார். இவர் அறப் போராட்ட திருத்தூதர் (apostle of non-violence) எனவும் அழைக்கப்படுகின்றார்.

தொடக்கக்கால வாழ்க்கை[தொகு]

ஒரு எகிப்திய அரசு அதிகாரியின் அடிமையாக இருந்தவர் மோசே. திருடியதாற்காகவும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்டும், இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.[1] பின்னர் இவர் கொள்ளைக்காரர்கள் கும்பல் ஒன்றின் தலைவர் ஆனார். நைல் பள்ளத்தாக்கில் பயங்கரவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் வடிவில் மிகவும் பெரியதாயும் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருந்தார்.[2]

மனமாற்றமும் துறவு வாழ்வும்[தொகு]

ஒரு சமயம், கொள்ளை நடத்த சென்ற இடத்தில் ஒரு நாய் குரைத்ததால் மோசே தனது திட்டத்தினை நிரைவேற்ற இயலவில்லை. அதனால் அவர் அதன் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கோடு அவரது வீட்டினை கொள்ளை இட மீண்டும் முயன்றார். நாய் மீண்டும் தடுக்கவே, தனது கோவத்தை தனிக்க தனது ஆடுகளில் சிலவற்றை கொன்றார். ஒருமுறை உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கும் முயற்சியாக அலெக்சாந்திரியாவுக்கருகே இருந்த ஸ்கேடீஸ் என்னும் பாலைவனத்தில் வாழ்ந்துவந்த துறவிகளிடம் அடைக்களம் புகுந்தார். அங்கு இருந்த துறவியரின் அர்ப்பண வாழ்வு, அவர்களின் அமைதி மற்றும் மனநிறைவு ஆகியவை மோசேவை ஆழமாக தாக்கியது. அதன் விளைவாக அவர் விரைவில் தனது பழைய வாழ்க்கையினை கைவிட்டு, ஒரு கிறிஸ்துவராக திருமுழுக்கு பெற்று, அத்துறவியர்களின் குழுவில் ஒரு துறவியாக இணைந்தார்.[3]

துறவு வாழ்வு இவருக்க முதலில் கடினமாகவே அமைந்தது. இவரின் முரட்டு குனம் இவரை அடிக்கடி மனம் தளர வைத்தது. எனினும் தொடர்ந்து தனது ஆன்மீக வாழ்வில் முன்னேரி பல கடும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். பின்னாட்களில் இவர் வட ஆப்ரிக்காவின் மேற்கு பாலைவனத்தில் இருந்த வனவாசிகளுக்கு ஆன்மீக தலைவரானார். அப்போது இவர் ஒரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.[3][4]

இறப்பு[தொகு]

இவருக்கு 75 வயதானபோது, கி.பி. 405இல், பெர்பர்களின் ஒரு குழு மடத்தினை தாக்கி அதனை சூறையாட திட்டமிட்டிருப்பதாக இவருக்கு செய்தி வந்தது. இம்மடத்தில் இருந்த பிற துறவிகள் அவர்களை எதிர்த்து போராட விரும்பினாலும், இவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அம்மடத்தில் இருந்த ஏழு துறவிகளைத்தவிர மற்ற எல்லோரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டு படையெடுப்பாளர்களை கைவிரித்து வரவேற்றார். இவரும் இவருடன் மடத்தில் இருந்த எழுவரும் அப்படையெடுப்பாளர்களால் ஜூலை 1 அன்று கொல்லப்பட்டனர். இவர் ஒரு மறைசாட்சியாக கருதப்படுகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The History of St. Moses the Black Priory
  2. Mission Statement of The Brotherhood of St. Moses the Black
  3. 3.0 3.1 http://www.premontre.org/subpages/loci/zzzlocalsites/lsjackson/stmosesbio.htm
  4. http://stmosestheblackpriory.org/about_history.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பரான_மோசே&oldid=2716799" இருந்து மீள்விக்கப்பட்டது