கரிம தையோசயனேட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீனைல் தையோசயனேட்டும் பீனைல் ஐசோதையோசயனேட்டும் சமபகுதியங்களாகும்.

கரிம தையோசயனேட்டுகள் (Organic thiocyanates) என்பவை RSCN என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள அனைத்து கரிமச் சேர்மங்களையும் குறிக்கும். இந்த கரிம வேதி வினைக்குழு கந்தகத்துடன் இணைந்திருக்கும். R−S−C≡N கட்டமைப்பில் ஒரு S–C ஒற்றைப் பிணைப்பும் ஒரு C≡N முப்பிணைப்பும் இடம்பெற்றிருக்கும்.[1]

கரிம தையோசயனேட்டுகள் மதிப்புமிக்க கட்டுமானத் தொகுதிகளாகும். பல்வேறு கந்தகம் கொண்ட வேதி வினைக்குழுக்களையும் சாரக்கட்டமைப்புகளையும் இவை திறமையாக அணுக அனுமதிக்கின்றன.[2]

தயாரிப்பு[தொகு]

கரிம தையோசயனேட்டுகள் தயாரிப்புக்கான பல தொகுப்பு வழிகள் உள்ளன. அவற்றில் ஆல்கைல் ஆலைடுகள் மற்றும் கார தையோசயனேட்டுகள் ஆகியவற்றுக்கு இடையே நடைபெறும் வினை மிகவும் பொதுவானதாகும்.[3] ஐசோபுரோப்பைல் புரோமைடுடன் கொதிக்கும் எத்தனாலில் உள்ள சோடியம் தையோசயனேட்டை சேர்த்து சூடுபடுத்தினால் ஐசோபுரோப்பைல் தையோசயனேட்டு உருவாகும் வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.[4] இந்த பாதையின் முக்கிய சிக்கல் ஆல்கைல் ஐசோதையோசயனேட்டு உருவாக்கம் ஆகும். இவை ஐசோதையோசயனேட்டு வழித்தோன்றல்களைக் கொடுக்க முனைகின்றன.

சில கரிம தையோசயனேட்டுகள் கரிமகந்தகச் சேர்மங்களின் சயனேற்ற வினையின் மூலம் உருவாக்கப்படுகின்றன. சல்பீனைல் குளோரைடுகளும் (RSCl) தையோசல்பேட்டுகளும் RSSO3) கார உலோக சயனைடுகளுடன் வினைபுரிந்து முறையே குளோரைடு மற்றும் சல்பைட்டின் இடப்பெயர்ச்சியுடன் தையோசயனேட்டுகளைக் கொடுக்கின்றன.

அரைதையோசயனேட்டுகள் பெரும்பாலும் தையோசயனோசனேற்றம் மூலம் பெறப்படுகின்றன. அதாவது தையோசயனோசனின் வினைமூலம் பெறப்படுகின்றன. எலக்ட்ரான் மிகு அடி மூலக்கூறுகளுக்கு இந்த வினை சாதகமானதாக இருக்கும்.[1]

வினைகள்[தொகு]

கரிம தையோசயனேட்டுகள் இரைம்சுநேடர் தையோகார்பமேட்டு தொகுப்பு வினையில் தையோகார்பமேட்டுகளாக நீராற்பகுப்பு செய்யப்படுகின்றன.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 R. G. Guy (1977). "Syntheses and Preparative Applications of Thiocyanates". in Saul Patai. Cyanates and Their Thio Derivatives: Part 2, Volume 2. PATAI'S Chemistry of Functional Groups. பக். 619–818. doi:10.1002/9780470771532.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470771532. 
  2. Castanheiro, Thomas; Suffert, Jean; Donnard, Morgan; Gulea, Mihaela (2016-02-01). "Recent Advances in the Chemistry of Organic Thiocyanates". Chem. Soc. Rev. 45 (3): 494–505. doi:10.1039/c5cs00532a. பன்னாட்டுத் தர தொடர் எண்:1460-4744. பப்மெட்:26658383. 
  3. "Synthesis of thiocyanates".
  4. R. L. Shriner (1931). "Isopropyl Thiocyanate". Organic Syntheses 11: 92. doi:10.15227/orgsyn.011.0092. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிம_தையோசயனேட்டுகள்&oldid=3757733" இலிருந்து மீள்விக்கப்பட்டது