ஒற்றைப் பிணைப்பு
[அ[File:Wassersஅtoff.svg|thumb|right|alt=Lewis structure for |நீரிய மூலக்கூற்றுக்கான லூயிசு அமைப்புமுறையில் ஓர் ஒற்றைப் பிணைப்பு வரைந்து காட்டப்பட்ட படம்]]
வேதியியலில், ஒற்றைப் பிணைப்பு (single bond) என்பது இரண்டு அணுக்களுக்கு இடையே உள்ள ஒருவகையான பிணைப்பாகும். இப்பிணைப்பு உருவாக்கத்தில் இரண்டு இணைதிறன் எதிர்மின்னிகள் பங்கேற்கின்றன. அதாவது, ஒற்றைப் பிணைப்பு உருவாகுமிடத்தில் இரண்டு அணுக்களும் ஒரு சோடி எதிர்மின்னிகளைப் பங்கீடு செய்து கொள்கின்றன[1].
பிணைப்பில் ஈடுபடும் அணுக்களுக்கிடையே எதிர்மின்னிகள் பங்கீடு அடைவதால் உண்டாகும் பிணைப்பு சகப்பிணைப்பு என்ப்படும். எனவே, ஒற்றைப் பிணைப்பு என்பது சகப் பிணைப்பின் ஒரு வகையாகும்.
இச்செயன்முறையின் போது அணுக்கள் நிலையான எட்டு எதிர்மின்னி அமைப்பைப் பெறுகின்றன. பங்கீடு செய்து கொள்ளும் போது அணுக்களில் உள்ள எதிர்மின்னிகள் இரண்டும் அவற்றின் சுற்றுப்பாதையில் ஏகபோகமாக இருப்பதில்லை. மாறாக இரண்டு எதிர்மின்னிகளும் ஏதாவதொரு சுற்றுப்பாதையில் நேரத்தைச் செலவிடுகின்றன. இரண்டு சுற்றுப்பாதைகளும் மேற்பொருந்தும் நேரத்தில் எதிர்மின்னிகள் பங்கீடு செய்து கொள்கின்றன. அவ்வாறு அணுச் சுற்றுப்பாதைகள் மேற்பொருந்துவதால் உருவாகும் அணுக்களுக்கு இடைப்பட்ட பிணைப்பே சகப் பிணைப்பு என்றழைக்கப்படுகிறது. பொதுவாக அணுக்களின் இணைதிறன் கூட்டில் உள்ள சுற்றுப்பாதையின் எதிர்மின்னிகள் இப்பங்கீட்டில் பங்கேற்கின்றன.
லூயிசு புள்ளி அமைப்புமுறையில் ஒற்றைப் பிணைப்பு, AːA அல்லது A-A என்று குறித்துக் காட்டப்படுகிறது. A என்பது பிணைப்பில் உள்ள தனிமத்தைக் குறிக்கிறது. முதலாவது முறையில் இரண்டு புள்ளிகளை ஒன்றன்கீழ் ஒன்றெனச் செங்குத்தாக வைத்திருப்பது, ஒவ்வோர் எதிர்மின்னியும் பங்கீடுசெய்து கொண்டுள்ளது என்பதை வெளிக்காட்டுவதாகக் கொள்ளலாம். இரண்டாவது முறையில் ஒரு சிறிய கிடைக்கோடு வரைந்து இரண்டு எதிர்மின்னிகளும் ஒரு பிணைப்பாகப் பங்கீடு செய்து கொண்டன என்று குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பும் கூட சகப்பிணைப்பாக இருக்கமுடியும். இவ்விரண்டு பிணைப்புகளையும் விட ஒற்றைப் பிணைப்பு பலங்குறைந்தது ஆகும். சகப்பிணைப்பபின் உட்கூறுகளை ஆய்வு செய்வதன் மூலம் இவ்வகையான வலிமை வேறுபாட்டிற்கான காரணத்தை அறியமுடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "covalent bonding - single bonds". Chemguide.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-08-12.