உள்ளடக்கத்துக்குச் செல்

கரிம்புழா வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிம்புழா வனவிலங்கு சரணாலயம்
Karimpuzha Wildlife sanctuary
அமைவிடம்நிலம்பூர், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா
பரப்பளவு227.97 km2 (88.0 sq mi)
நிறுவப்பட்டது2020

கரிம்புழா வனவிலங்கு சரணாலயம் (Karimpuzha Wildlife sanctuary) இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூருக்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு வனவிலங்கு சரணாலயமான இது 2020 ஆம் ஆண்டு சூலை மாதம் 3 ஆம் தேதியன்று வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 227.97 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ள இச்சரணாலயம் சோழநாயக்கர் பழங்குடியினரின் மஞ்சேரி காலனியைத் தவிர, புதிய அமரம்பலம் காப்புக்காடு மற்றும் வடக்கேகோட்டா கந்துவட்டிக் காடுகளையும் உள்ளடக்கியுள்ளது. [1] நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியையும் இச்சரணாலயம் உருவாக்குகிறது..

சூழலியல் முக்கியத்துவம்

[தொகு]

கரிம்புழா டபிள்யூஎல்எஸ் கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவையும், தமிழ்நாட்டின் முகூர்த்தி தேசியப் பூங்காவையும் இணைக்கிறது. [2] தெற்கில் முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் வடகிழக்கில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா இடையக மண்டலம் ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது. [1] மேலும், கரிம்புழா வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் புதிய அமரம்பலம் காப்புக்காடு மனிதர்களால் தீண்டப்படாத மிகவும் பழமையான காடுகளில் ஒன்றாகும். [2]

வனவிலங்கு சரணாலயத்தின் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து 40 மீ முதல் 2,654 மீ வரை உயரமாக உள்ளது, இதனால் ஒரு பெரிய உயரமான சாய்வும் காணப்படுகிறது. கரிம்புழா சரணாலயம் கேரளாவில் உள்ள ஒரே வனப்பகுதியாகும்.. அரை பசுமையான காடுகள், பசுமையான மழைக்காடுகள், ஈரமான இலையுதிர் காடுகள், துணை வெப்பமண்டல சவன்னா, துணை வெப்பமண்டல மலை காடுகள், மலை ஈரமான மிதமான காடுகள் மற்றும் மலை ஈரமான புல்வெளிகள்.முதலான ஏழு காடுகள் இதில் உள்ளன . [2]

விலங்கினங்கள்

[தொகு]

கரிம்புழா வனவிலங்கு சரணாலயத்தில் நீலகிரி வரையாடு மற்றும் சிங்கவால் மக்காக் உட்பட மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட அனைத்து பாலூட்டிகளும் இங்கு உள்ளன. வனவிலங்கு சரணாலயத்தில் 226 பறவைகள், 213 பட்டாம்பூச்சி இனங்கள், [2] 23 வகையான நீர்வாழ் இனங்கள், 33 ஊர்வன இனங்கள் மற்றும் பல அழிந்து வரும் மீன் இனங்கள் போன்ற விலங்கினங்கள் இங்கு உள்ளன. [1]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]