கம்போடியாவின் தொடக்ககால வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்போடியாவின் தொடக்ககால வரலாறு என்பது தென்கிழக்கு ஆசியாவின் முகியமான நிலப்பரப்பான கம்போடியாவின் தொடக்ககால வரலாற்றைக் குறிப்பதாகும். கம்போடியாவின் வரலாற்று வளர்ச்சியானது வரலாற்றுக்கு முந்தைய காலம் மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ ஹிஸ்டாரிக் காலத்திலிருந்தே தொடர்ந்து வருவதாகும்.

கம்போடியாவில் 2009 முதல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வுப் பணிகளுக்கு நன்றி செலுத்துவது அவசியமாகும். ஏனெனில் இந்த தொல்பொருள் ஆய்வுக்குப் பின்பு கம்போடியாவின் வரலாறானது கற்கால காலத்திற்கு முன்பாகச் செல்கிறது. கம்போடியாவின் ஏராளமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில், அகழ்வாராய்ச்சி தளங்களில் நவீன கால அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுறது இந்த ஆய்வுகளில் கம்போடியாவின் வரலாறானது, இப்பகுதியில் கற்கால வேட்டைக் குழுக்கள் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட முன்கூட்டிய சமூகங்கள் வரை மனித நாகரிக வளர்ச்சியின் அனைத்து நிலைகளின் சான்றுகளும் தீர்வுத் தடயங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.[1][2]

சீனாவின் மிகப்பழைமையான வரலாற்றுக் குறிப்பொன்று ஒன்று முதல் ஆறாம் நூற்றாண்டுகள் வரையிலான கால கட்டங்களில் இந்தோனேசிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியை உள்ளடக்கிய , இப்போது நவீன கம்போடியாவாக இருக்கும் நிலப்பரப்பில் மீகாங்கை மையமாகக் கொண்ட புனான் எனப்படும் ஒரு அரசியல் கட்டமைப்பு இருந்ததாகக் குறிக்கிறது. மேலும் இந்த மிகப்பழைமையான புனான் பிராந்தியத்தில், இந்து கலாச்சாரம் பின்பற்றப்பட்டதாகவும் அக்குறிப்பில் குறிப்பிடப்படுகிறது, இந்தப் புனான் பகுதியானது மேற்கில் இந்திய மண்டலத்தில் கடல் வர்த்தகக் கூட்டாளிகளுடன் நீண்டகால சமூக-பொருளாதாரட் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாம் நூற்றாண்டில், இப்பகுதியில் பரவிய சென்லா அல்லது ஜென்லா என்ற பெயர் கொண்ட ஒரு நாகரிகம், புனானை இந்துக் கலாச்சாரத்தில் இருந்து முற்றிலுமாக மாற்றியது, ஏனெனில் இந்த நாகரிகமானது இந்தோசீனாவில் மிகப்பெரிய அளவில் ஓர் அலைபோலப் பரவி, அதன் அதிக அளவிலான பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. மேலும் ஒரு அதிகார மையத்தை விட அதிகமாக அதனைப் பேணியது.[3][4]

ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகேந்திர மலை எனப்படும் குலேன் மலையில் தனது அரசியல் மற்றும் வாரிசுரிமைத் தன்மையை நிலைநாட்டுவதற்காக கி.பி 802 இல் இரண்டாம் ஜெயவர்மனால் கெமர் இராச்சியம் 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கெமர் பேரரசு நிறுவப்பட்டது சக்திவாய்ந்த இறையாண்மையின் தொடர்ச்சியாக, 11 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் கெமர் அரசு ஆட்சி செய்தது. கெமர் நாகரிக ஆட்சியின் செம்மையான சகாப்த காலத்தில் மன்னரைக் கடவுளின் அவதாரமாக வழிபடும் இந்து தேவராஜ வழிபாட்டு மரபு இப்பகுதியில் தொடர்ந்தது. அதன் பின்பு ஆட்சி செய்த ஓர் புதிய அரச மரபனது மதம், அரசு, நிர்வாகம், இராணுவ இயல்பு, சுற்றுச்சுழல் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் சமநிலை .[5] ஆகியவற்றின் மாற்றங்களுடன் இந்தோசீனாவில் அதிகார மாற்றங்களுடன் ஒத்துப்போகிற புத்த மதத்தை அறிமுகப்படுத்தியது .[6][7][8][9] தென்கிழக்காசியாவின் கலாச்சார மரபில் இக்காலம் சிக்கல்கள் நிறைந்ததாக இருப்பினும், நிர்வாகத்தில் பெரும் சாதனைகள் மற்றும் வேளாண்மை, கட்டிடக்கலை, நீர்வளவியல், தளவாடங்கள், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கலைகளில் சாதனைகள் ஆகியன ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் முற்போக்கான நாகரிகத்திற்கு சான்றாகும் - இக்காலம் தென்கிழக்காசியாவின் கலாச்சார மரபின் ஒரு மைல்கல்லாகும்.[10] கம்போடியாவின் மன்னர்களின் பட்டியல் 14 ஆம் நூற்றாண்டில் முடிவடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chandler, David (July 2009). "Cambodian History: Searching for the Truth". Cambodia Tribunal Monitor. Northwestern University School of Law Center for International Human Rights and Documentation Center of Cambodia. பார்க்கப்பட்ட நாள் November 25, 2015. We have evidence of cave dwellers in northwestern Cambodia living as long ago as 5000 BCE.
  2. David Chandler, A History of Cambodia (Westview Publishers: Boulder Colorado, 2008) p. 13.
  3. ""What and Where was Chenla?", Recherches nouvelles sur le Cambodge" (PDF). Michael Vickery’s Publications. பார்க்கப்பட்ட நாள் 5 July 2015.
  4. "Considerations on the Chronology and History of 9th Century Cambodia by Dr. Karl-Heinz Golzio, Epigraphist - ...the realm called Zhenla by the Chinese. Their contents are not uniform but they do not contradict each other" (PDF). Khmer Studies. Archived from the original (PDF) on 24 May 2015. பார்க்கப்பட்ட நாள் 5 July 2015.
  5. "Scientists dig and fly over Angkor in search of answers to golden city's fall by Miranda Leitsinger". The San Diego Union-Tribune. 13 June 2004. Archived from the original on 24 December 2013. பார்க்கப்பட்ட நாள் 19 June 2015.
  6. "The emergence and ultimate decline of the Khmer Empire - Many scholars attribute the halt of the development of Angkor to the rise of Theravada..." (PDF). Studies Of Asia. Archived from the original (PDF) on 20 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "What Caused the End of the Khmer Empire By K. Kris Hirst". About com. Archived from the original on 1 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "THE DECLINE OF ANGKOR". Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015.
  9. "The emergence and ultimate decline of the Khmer Empire was paralleled with development and subsequent change in religious ideology, together with infrastructure that supported agriculture" (PDF). Studies Of Asia. Archived from the original (PDF) on 20 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Khmer Empire". The Ancient History Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.