கமல் கும்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
8 மார்ச் 2022 அன்று கமல் கும்பருக்கு நாரி சக்தி விருது இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட போது

கமல் கும்பர் (Kamal Kumbhar) என்பவர் இந்தியச் சமூக தொழில்முனைவோர், "தொடர் தொழில்முனைவோர் " ஆவார். இவர் கமல் கோழிப்பண்ணை மற்றும் ஏக்தா தயாரிப்பாளர் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மகாராட்டிராவின் உஸ்மானாபாத்தில் ஒரு தினக்கூலித் தொழிலாளிக்கு மகளாகப் பிறந்தவர் கமல் கும்பர். வறுமையில் வாடிய இவர் கல்வி கிடைக்காமல் வளர்ந்தார். இளம் வயதிலேயே திருமணம் செய்து மணவாழ்க்கையில் தோல்வியடைந்ததால், பொருளாதார ரீதியாக நலிவுற்றார்.

தொழில்[தொகு]

கும்பர் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் சேர்ந்து, 500 ரூபாய் முதலீட்டில் வளையல் விற்கும் சிறு வணிகத்தைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் மகாராட்டிராவில் பெண்கள் கூட்டமைப்பை வழிநடத்தினார்.

2,000 ரூபாய் முதலீட்டில் கமல் கோழிப்பண்ணை மற்றும் ஏக்தா தயாரிப்பாளர் நிறுவனத்தை 1998-ல் தொடங்கினார். இந்நிறுவனம் மாதந்தோறும் சுமார் ரூ.1 லட்சம் வரை பொருட்களை விற்பனை செய்கிறது. இவர் தனது மாநிலத்தைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதுபோன்ற நிறுவனங்களை அமைத்து தன்னிறைவு அடைய வழிகாட்டியுள்ளார்.[1]

2012ஆம் ஆண்டில், இவர் ஒரு எரிசக்தி தொழில்முனைவோராக ஆனார். 3000க்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்களை ஒளிரச் செய்தார், "தூய்மையான எரிசக்தியில் பெண்கள்" என்ற "சக்தி பெண்கள்" பயிற்சிக்குப் பிறகு, மகாராட்டிரா மற்றும் பீகார் முழுவதும் 1100 பெண்களுக்குப் பயிற்சி அளித்தார். "தொடர் தொழில்முனைவோர்" என்று அழைக்கப்படும் ஆறு வணிக முயற்சிகளை இவர் செயல்படுத்தி வருகின்றார். இவர் விவசாயம் சார்ந்த வணிகங்களுக்குச் சொந்தமானவர்.[2][3][4]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "citation for receiving award". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-09.
  2. "Serial entrepreneur: Her ventures have enabled 3,000 women in the drought-prone region of Osmanabad to be financially independent". 18 March 2018.
  3. https://www.sspindia.org/wp-content/uploads/2017/09/Profile-of-Kamal-Kumbhar-Serial-Entrepreneur.pdf [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Kamal Walked Out Of Poverty And A Failed Marriage To Set Up 6 Business Ventures". 30 May 2018.
  5. "Women Transforming India 2017". United Nations India. Archived from the original on 2022-01-12. பார்க்கப்பட்ட நாள் 2022-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_கும்பர்&oldid=3604150" இலிருந்து மீள்விக்கப்பட்டது