தன்நிறைவு
Appearance
தன்நிறைவு என்பது, வெளியிலிருந்து உதவியோ, சில தீவிரமான நிலைப்பாடுகளின்படி தொடர்புகளோகூட இல்லாமல் வாழக்கூடிய ஒரு நிலையைக் குறிக்கும். தன்நிறைவு என்னும் சொல் பொதுவாகப் பலவகையான தாங்குவளர்ச்சி வாழ்க்கை தொடர்பில் பயன்படுகின்றது. இவற்றில், தன்நிறைவான தனிப்பட்டவர்கள் உற்பத்தி செய்வனவற்றுக்கு அப்பால் வெளியிலிருந்து எதுவுமே கொள்ளப்படுவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டுகளாக வட அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட, தன்னார்வ எளிமை இயக்கம்(voluntary simplicity), மண்ணுக்குத் திரும்புதல் இயக்கம் (back-to-the-land movement) போன்ற பல முயற்சிகளைக் காட்டலாம்.