கமரூன் வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கினி வளைகுடாவின் வரைபடத்தில், கமரூன் வரிசையைக் காணலாம்.
கமரூன் வரிசையை விவரிக்கும் வரைபடம்

கமரூன் வரிசை (ஆங்கில மொழி: Cameroon line, பிரெஞ்சு மொழி: Ligne du Cameroun, போர்த்துக்கேய மொழி: Linha dos Camarões, எசுப்பானியம்: cordillera de Camerún) என்பது 1,600 km (1,000 mi) நீளமுள்ள சங்கிலி போன்று வரிசையாக அமைந்துள்ள இயற்கையான நிலப்பகுதியைக் குறிக்கிறது. இவ்வரிசையில் எரிமலைகள், கினி வளைகுடாவின் தீவுகள், ஆப்பிரிக்காவின் முதன்மை நிலப்பகுதியின் கடற்கரையை நோக்கியுள்ளகாமரூன் மலை, வட கிழக்கில் உள்ள சாட் ஏரி ஆகியன அமைந்துள்ளன.[1] இயற்கை எல்லைகளாக, இதன் கிழக்கே நைஜீரியா, [[மேற்கு மண்டலம் (கமரூன்) பகுதியும் அமைந்துள்ளன. இத்தீவுகள் நிலநடுக்கோடு உள்ள நிலமாகப் பரந்து உள்ளதால், இந்நிலப்பரப்பில் வெப்ப வலயம் சூழ்நிலை, பல பறவை இனங்களுகும், தாவர இனங்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. ஆப்பிரிக்க முதன்மை நிலப்பரப்பில் உள்ள மலைகள் குளிர்ந்து காணப்படுகின்றன. எனவே, உயரிகளின் வேறுபட்ட இயல்புகளுக்கு ஏற்பப் பல்வேறு உயிரினங்களுள்ள முக்கிய சுற்றுச்சூழல் காணப்படுகின்றன. இவ்வாறு காமரூன் எரிமலை வரிசை நிலவியல் அடிப்படையில் கண்டத்தின் நிலத்திலும், அருகில் உள்ள கடலிலும் நீண்டுள்ளதை விவரிக்கும் பல நிலவியல் கோட்பாடுகள் கூறப்படுகின்றன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Burke 2001.
  2. Foulger 2010, ப. 1ff.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமரூன்_வரிசை&oldid=3917584" இலிருந்து மீள்விக்கப்பட்டது