கப்பி மீன்
கப்பி மீன் | |
---|---|
![]() | |
முதிர்ந்த ஆண் மற்றும் பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
![]() | |
Distribution map for Poecila reticulata | |
வேறு பெயர்கள் [1] | |
|
கப்பி மீன் (Guppy), நன்னீர் மீன்களில் வெப்ப வலயப் பகுதி மீன் இனம் ஆகும். இது ஓர் அனைத்துண்ணி வகை மீனாகும். இவற்றின் குடும்பப் பெயர் பொசிலிடே (Poeciliidae) என்பதாகும். இவற்றின் பூர்வீகம் வெனிசுவேலாப் பகுதி ஆகும். மேலும் இவை பிரேசில், அமெரிக்க கன்னித் தீவுகள், நெதர்லாந்து அண்டிலிசு, டிரினிடாட் மற்றும் டொபாகோ, கயானா, பார்படோசு, மற்றும் அன்டிகுவா பர்புடா போன்ற பகுதிகளிலும் பரவியுள்ளது.
கப்பி மீனில், பெண் மீன்கள் ஆண் மீன்களைவிட பெரியதாக உள்ளது. பல்வேறு சூழ்நிலைகளில் செழித்து வளரும் தன்மை கொண்டவையாக உள்ளது.[2] இவை பல வண்ணங்கள் கொண்ட உடல் அமைப்பைப் பெற்றுள்ளது. அனைத்துண்ணி மீன் வகையான இவை பெரிய தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. இவற்றில் பல வகையான கப்பி மீன்களும் காணப்படுகின்றன. இவை உணவாக கடலடி மண்டலத்தில் (Benthic zone) கிடைக்கும் பாசிகள், புழுக்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. தற்போதைய நிலையில் சூழலியல், படிவளர்ச்சிக் கொள்கை, மற்றும் நடத்தை அறிவியல் கொள்கையின் படி இம்மீன்கள் மாதிரி உயிரினமாக (Model organism) எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Synonyms of Poecilia reticulata". FishBase.org இம் மூலத்தில் இருந்து 22 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130922050250/http://www.fishbase.org/Nomenclature/SynonymsList.php?ID=3228&GenusName=Poecilia&SpeciesName=reticulata. பார்த்த நாள்: 16 November 2013.
- ↑ "Guppy Fish". AquaticCommunity.com இம் மூலத்தில் இருந்து 9 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120609133734/http://www.aquaticcommunity.com/livebearer/guppy.php. பார்த்த நாள்: 24 February 2013.
மேலும் படிக்க[தொகு]
- Houde, Anne E (1997). Sex, Color, and Mate Choice in Guppies. Princeton, NJ: Princeton University Press. பக். 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-02789-0.
வெளி இணைப்புகள்[தொகு]

- "Poecilia reticulata". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). http://www.itis.gov/servlet/SingleRpt/SingleRpt?search_topic=TSN&search_value=165903. பார்த்த நாள்: 8 June 2004.
- "Poecilia reticulata". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. April 2004 version. N.p.: FishBase, 2004.