கப்பல்துறை
கப்பல்துறை (dock) என்பது கப்பல்களை ஏற்றுதல், இறக்குதல், கட்டுதல் அல்லது பழுதுபார்த்தல் ஆகியவை நிகழும் தளத்தை குறிக்கும் சொல் ஆகும். இத்தளத்தை ஆங்கிலத்தில் "டாக்" என்றும் அழைக்கிறார்கள். டாக் அல்லது டொக் என்ற சொல் (இடச்சு மொழியில் டொக்) அமெரிக்க ஆங்கிலத்தில் படகுகள் அல்லது கப்பல்களைக் கையாள்வதில் ஈடுபட்டுள்ள ஒருவரால் அல்லது பலரால் பெரு நீர்ப்பரப்புகளின் கரையில் அல்லது அருகாமையில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளைக் குறிக்கிறது.
வரலாறு
[தொகு]செங்கடல் கடற்கரையில் கி.மு. 2500 இல் இருந்த பார்வோன் கூபுவின் பண்டைய எகிப்திய துறைமுகமான வாடி அல்-ஜார்ஃப் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டவைதான் ஆரம்பகால அறியப்பட்ட கப்பல்துறைகள் ஆகும். [1] தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த தளத்திற்கு அருகில் நங்கூரங்கள் மற்றும் சேமிப்பு சாடிகளை கண்டுபிடித்தனர். [2]
இந்தியாவில் உள்ள லோதலில் கண்டறியப்பட்ட ஒரு கப்பல்துறை கிமு 2400 க்கு முந்தையது என கணிக்கப்பட்டுள்ளது [3] [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marouard, Gregory; Tallet, Pierre (2012). "Wadi al-Jarf - An early pharaonic harbour on the Red Sea coast". Egyptian Archaeology 40: 40–43. https://www.academia.edu/1819574. பார்த்த நாள்: 18 April 2013.
- ↑ Tallet, Pierre (2012). "Ayn Sukhna and Wadi el-Jarf: Two newly discovered pharaonic harbours on the Suez Gulf". British Museum Studies in Ancient Egypt and Sudan 18: 147–68. பன்னாட்டுத் தர தொடர் எண்:2049-5021. https://www.britishmuseum.org/PDF/Tallet.pdf. பார்த்த நாள்: 21 April 2013.
- ↑ Codebò, Mario (2013). "ARCHAEOASTRONOMICAL SURVEYS IN LOTHAL (INDIA)". பார்க்கப்பட்ட நாள் 2020-05-10.
- ↑ Frenez, D. Lothal re-visitation Project, a fine thread connecting Intis to contemporary Raveena (Via Oman).