கனு தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனு தேசாய் (Kanu Desai) என்கிற கன்னையாயலால் குகுமத்ராய் தேசாய் (Kanhaiyalal Hukumatrai Desai), (12 மார்ச் 1907 - 9 டிசம்பர் 1980) ஒரு இந்திய கலைஞரும், கலை இயக்குனரும் ஆவார். இவர் மேடை அலங்கார கலைக்கு பங்களித்தார். திரைப்படங்களுக்கான படங்கள் வரைந்து கொடுத்தார். மேலும் மகாத்மா காந்தி எழுதிய பல புத்தகங்களுக்கு படங்களை வரைந்துள்ளார்.

வாழ்க்கை[தொகு]

கனு தேசாய் வரைந்த இத்தாலிய மொழியியலாளரான கார்லோ பார்மிச்சியின் ஓவியம்.

கனு தேசாய் 1907 இல் பம்பாய் மாகாணத்தில் உள்ள பச்சில் பிறந்தார். பின்னர் இவரது குடும்பம் அகமதாபாத்தில் உள்ள இவரது தாய் மாமன் வீட்டிற்கு மாற்றப்பட்டது. 1920 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மகாத்மா காந்தி உரையாற்றிய இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் தொண்டாற்றினார். 1922 இல் கலையைக் கற்க ரவிசங்கர் ராவலிடம் சேர்ந்தார். 1925 ஆம் ஆண்டு குஜராத் வித்யாபீடத்தின் உதவித்தொகை மூலம் நந்தாலால் போஸின் கீழ் படிக்க சாந்திநிகேதனுக்கு அனுப்பப்பட்டார். அங்கு போஸ், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார். 1930 இல், காந்தியுடன் தண்டி அணிவகுப்பில் இணைந்தார். அந்த நிகழ்வைப் பற்றிய பல ஓவியங்களை வரைந்தார். பின்னர் நிழற்படங்களை வரையத் தொடங்கினார். 1937 ஆம் ஆண்டில், ஹரிபுராவில் நடந்த காங்கிரசு மாநாட்டு மேடையை அலங்கரிக்க இவர் அழைக்கப்பட்டார். இவரது ஓவியங்கள் ஜீவன் மங்கள் மற்றும் நிருத்ய மஞ்சரி என்ற தலைப்புகளில் காதல் தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. புத்தகங்களின் அட்டைப் பக்கங்களை வடிவமைத்த பிறகு, மும்பையில் திரைப்படங்களுக்கான அரங்கங்களை வடிவமைக்கத் தொடங்கினார். ராம் ராஜ்ஜியம் (1945) என்ற திரைப்படத்திற்காக (1945) அரங்கங்களை உருவாக்கினார். பைஜு பாவ்ரா, நவ்ரங், பாரத் மிலாப், ஜனக் ஜனக் பாயல் பாஜே உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றினார். 1980 இல் இவர் இறந்தார் [1]

விருதுகள்[தொகு]

இவர் 1938 இல் குஜராத்தி கலாச்சாரத்தின் மிக உயரிய ரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் என்றா விருதைப் பெற்றார் [2] 1957 இல் ஜனக் ஜனக் பாயல் பஜே படத்திற்காக இவருக்கு சிறந்த கலை இயக்கத்திற்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. [3] 1965 இல், குஜராத் மாநில லலித் கலா அகாடமியில் இருந்து குஜராத் கௌரவ் புரஸ்கார் பெற்றார். [2]

சான்றுகள்[தொகு]

  1. "Kanu Desai Biography". NuGa Arthouse. பார்க்கப்பட்ட நாள் June 13, 2014.
  2. 2.0 2.1 "Kanu Desai Biography". NuGa Arthouse. பார்க்கப்பட்ட நாள் June 13, 2014."Kanu Desai Biography". NuGa Arthouse. Retrieved June 13, 2014.
  3. "Best Art Director Award Filmfare". Awards&Shows. பார்க்கப்பட்ட நாள் June 13, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனு_தேசாய்&oldid=3790650" இலிருந்து மீள்விக்கப்பட்டது