கனிமொழி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனிமொழி (Kanimozhi (film) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி காதல் திரைப்படமாகும், ஸ்ரீபதி ரங்கசாமி என்பவர் இயக்கத்தில் டி. சிவா மற்றும் சோனா ஹைடன் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்தத் திரைப்படத்தில் ஜெய் மற்றும் ஷாஜான் பதம்ஸி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு சதீஷ் சக்ரவர்த்தி என்பவர் இசையமைத்துள்ளார். சிதம்பரம் ஒளிப்பதிவு மேற்கொண்டார், மற்றும் பிரவீன் கே. எல் மற்றும் என்.பி. ஸ்ரீகாந்த் ஆகியோர் பதிப்பிக்கும் பணியினை மேற்கொண்டனர்

மார்ச் 2010 இல் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 46 நாட்களில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது.ஆகஸ்ட் 2010 இல் படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றது. எந்திரன் படத்திற்கான வெளியீடு மற்றும் படத்தினை வெளியிடும் வேலைகள் போன்ற காரணங்களினால் இந்தப் படம் மூன்று மாதம் தாமதமாக வெளியானது.26 நவம்பர், 2010 இல் இந்தத் திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இந்தப் படம் தோல்வியடைந்தது. 2012 ஆம் ஆண்டில் லவ் ஜர்னி எனும் பெயரில் இந்தத் திரைப்படம் தெலுங்கில் மீளுருவாக்கம் ஆனது.

நடிகர்கள்[தொகு]

ராஜேஷாக ஜெய் அனு (ஷாஜான் பதம்ஸி)

கௌசிக் ( விஜய் வசந்த்) மைக்கேல் (மைக்கேல் தங்கதுரை)

லட்சுமி ராமகிருஷ்ணன் ஹரியாக ரங்கா

தீபக்காக அஸ்வின் ராஜா திலீப்பாக அஜய்

விருந்தினர் தோற்றத்தில் சுவாதி ரெட்டி

தயாரிப்பு[தொகு]

வளர்ச்சி[தொகு]

சரோஜா திரைப்படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து அதன் இயக்குனர் வெங்கட் பிரபு, தனது உதவியாளரான ஸ்ரீபதி ரங்கசாமியினை டி. சிவாவிடம் பரிந்துரை செய்தார். மேலும் சோனா என்பவரை இணைத் தயாரிப்பாளராகவும் பரிந்துரை செய்தார்.[1] சிவா இந்தப் படத்திற்காக கனிமொழி எனும் தலைப்பினை பரிந்துரை செய்தார். மேலும் அவர் அரசியல்வாதியான கனிமொழியின் பெயர் இருப்பதால் அது படத்தின் விளம்பரத்திற்கு உதவும் என நினைத்தார். இதை கனிமொழியிடம் தெரிவித்த போது கதையினைத் தெரிந்துகொண்டு இந்தத் திரைப்படத்திற்கு தனது பெயரினை வைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் கதை நன்றாக உள்ளதாகவும் படக்குழுவினரைப் பாராட்டினார்.

ஸ்ரீபதி இரண்டு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிறகு இந்தப் படத்தினை இயக்கினார். ராஜேஷ் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெய் ஒப்பந்தமானார். அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க 21 வயதான தோற்றம் கொண்ட ஒரு நடிகர் தேவை எனவும் அதற்கு ஜெய் மிகப் பொருத்தமாக இருப்பார் எனவும் நினைத்தார். 2008 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற சுப்பிரமணியபுரத்தில் ஜெய்க்கு இணையாக நடித்த சுவாதி ரெட்டி, ஆரம்பத்தில் முன்னணி பெண் பாத்திரத்திரமாகக் கருதப்பட்டார். ஆனால் பின்னர் அவர் நடிக்கவில்லை.[2] விஜய் வசந்த் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ரங்கா மற்றும் மைக்கேல் தங்கதுரை ஆகியோர் ஜெயின் நண்பர்களாக நடிக்க தேர்வு செய்யப்பட்டனர்.

சக்தி சரவணனின் உதவியாளரான பி. சிதம்பரம் இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆனார். இந்தக் கதையினைக் கேட்ட பத்து நிமிடங்களில் இந்தத் திரைப்படம் ஒப்பந்தமானது. வெங்கட் பிரபுவின் விருப்பமான குழுவில் இடம் பெற்றவர்களான பிரவீன் கே.எல் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்தப் படத்திலும் பணியாற்றினர்.

குறிப்புகள்[தொகு]

  1. Moviebuzz (2010). "Kanimozhi will touch your heart: Sona". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 2010-11-22.
  2. "Jai in 'Kanimozhi'". Indiaglitz.com. 2010. Archived from the original on 2010-03-27. பார்க்கப்பட்ட நாள் 2010-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிமொழி_(திரைப்படம்)&oldid=3709843" இலிருந்து மீள்விக்கப்பட்டது