கனிமொழி கருணாநிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:19, 12 சனவரி 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (அரிஅரவேலன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
கனிமொழி
படிமம்:Kanimozhi in Madurai.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1968
சென்னை,தமிழ்நாடு
அரசியல் கட்சிதி.மு.க
துணைவர்அரவிந்தன்
பிள்ளைகள்ஆதித்யா
As of மே 30, 2009
மூலம்: [நிலாச்சாரல் தன்குறிப்பு]

கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி, தற்போது இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மூன்றாவது மணைவி ராசாத்தி அம்மாளின் மகள் ஆவார். இவரது அண்ணன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.

குடும்பம்

மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார். 1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய, ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார்.[1] இவருக்கு ஆதித்யா என்று ஒரு மகன் உள்ளார்.

பொது வாழ்வு

சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.

தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.

2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார், இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைகிறது.

2 ஜி ஸ்பெக்ட்ரம்

இவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[2] இவர் பிணைக்காக நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மே 20, 2011 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார்.[3]

சூன் 8, 2011 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு இவர் மீண்டும் திகார் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.[4]

இலக்கியம்

கவிதைத் தொகுப்புகள்

  • கருவறை வாசனை
  • அகத்திணை
  • பார்வைகள்
  • கருக்கும் மருதாணி

இசைத் தொகுப்புகள்

  • சிலப்பதிகாரம் (பாம்பே ஜெயசிறீயுடன் இணைந்து)

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. http://www.rediff.com/news/aug/28dmk.htm
  2. http://www.indianexpress.com/news/bojan/781412
  3. http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=54323 நக்கீரன் இணையதளச் செய்தி
  4. "கனிமொழி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்". Economic times. பார்க்கப்பட்ட நாள் சூன் 09, 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிமொழி_கருணாநிதி&oldid=1598046" இலிருந்து மீள்விக்கப்பட்டது