கனிதேடல்
கனிதேடல் (dowsing) ஒரு வகை தேடுதல் முறை ஆகும். நிலத்தடி நீர் ,கற்கள், உலோகங்கள் எண்ணெய், கனிமம்[1] ஆகியவற்றை கண்டறிய உதவும் அதிக செலவினம் இல்லா கருவிகளை கொண்டு செய்யப்படும் ஓர் கண்டறிதல் முறை ஆகும். இது போலி அறிவியல் (போலி அறிவியல்) வகையினதாக கருதப்படுகிறது, இவ்வகையான கண்டறிதல் முறை எவ்விதமான அறிவியல் வகையிலும் நிரூபிக்கப்படாதது. இதனால் பெறப்படும் வெற்றியை கொண்டே இதன் நம்பகத்தன்மை அறியப்படுகிறது.[2][3]
கனித்தேடல் என்பது கணித்தல் என்றும் அறியப்படுகிறது.
ஆங்கில எழுத்தான Y வடிவ வெட்டப்பட்ட மரத்தின் மெல்லிய கிளை ( பெரும்பாலும் வேப்பமரத்தின் கிளை) இதற்காக பயன்படுத்தப்படுகிறது. இரண்டு L வடிவ கம்பிகளும் இம்முறையில் கனிதேட பயன்படுத்தப்படுகின்றது.
தற்காலங்களில் கனிதேடல் வகையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் L வடிவ இரு கம்பிகளின் விளைவானது உள்ளுணர்வும், உடலியக்கமும் சார்ந்த இயக்கங்களின் ஒருங்கிணைப்பு விளைவாக கருதப்படுகிறது.[4][5]
வரலாறு
[தொகு]தற்போதைய நாட்களில் பயன்பாட்டில் உள்ள கனிதேடல் முறையானது ஜெர்மனியில் 15 ஆம் நூற்றாண்டில் பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களை தேட பயன்படுத்தப்பட்டவையாக அறியப்படுகின்றன. 1518 ஆம் ஆண்டு மார்டின் லூதர் கனிதேடல் முறையினை மறைபொருள் ஆய்வு (occultism) வகையினில் செய்துள்ளார்.
1568 ஆம் ஆண்டு வெளியான சில நூல்களில் கனிதேடல் முறையில் நீரினை தேடுதல் குறித்த குறிப்புகள் உள்ளன.
உபகரணங்கள்
[தொகு]கம்பிகள் மற்றும் குச்சிகள்
[தொகு]பாரம்பரியமாக Y வடிவம் கொண்டு மரக்கிளைகள் அல்லது புதர் செடியின் கிளைகள் இவ்வகை கனிதேடலுக்கான உபகரணமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் இதற்காக வேப்பமரத்தின் கிளைகளை பயன்படுத்துகின்றனர். இதன் கிளைகள் காயாமல் இருக்க வேண்டும் என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது. புதிதாக ஒடிக்கப்பட்ட வேப்ப மரத்தின் Y வடிவ கிளையினை (நெகிழும் தன்மையுடைய , வளையக்கூடிய) ஒடித்து கனிதேடுபவர்கள் பயன்படுத்துகின்றனர்.
தற்போதெல்லாம் L வடிவ கம்பிகளின் பயன்பாடு கனி தேடுதல் முறையில் அதிகமாக உள்ளது. இதில் ஒரு பக்கம் குறைந்த நீளம் உடையதாகவும் மற்றொரு புறம் அதிக நீளம் உடையதாகவும் வளைத்து உருவாக்கப்படுகின்றது. சாதாரண இரும்பு கம்பிகளை வளைத்தும் இவ்வகை L வடிவ கம்பிகளை உருவாக்கிக்கொள்ளலாம். இரண்டு கம்பிகளும் சமநீளமும், சம எடை அளவும் இருப்பது சிறந்தது. இதன் சிறிய நீளம் உடைய பகுதியை வலது மற்றும் இடது கைகளில் பிடித்துக்கொண்டு கனிதேடுபவர் நிலத்தில் நடக்கும் போது நீர் வளம் அல்லது கனிம வளம் கொண்ட பகுதியை நோக்கி இந்த கம்பிகளின் அதிக நீளம் கொண்ட பகுதி திரும்பும். குறிப்பிட்ட அந்த பகுதி (நீர் வளம் உள்ள பகுதி) யை அடைந்த உடன் இரண்டு கம்பிகளும் ஒன்றை ஒன்று குறுக்கிட்டு X வடிவமாக மாறும். அதாவது இணையான கம்பிகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டு நிற்கும் நிலையினை அடையும்.
ஊசல்
[தொகு]ஊசல் முறையிலான கனிதேடல் வகையினில் ஓர் மெல்லிய சங்கிலியினின் ஓர் முனையில் கட்டப்பட்ட அல்லது பொருத்தப்பட்ட படிகம் அல்லது உலோகம் ஆனது இம்முறையில் கருவியாக பயன்படுகிறது. ஊசல் முறையிலான கனிதேடலில் கனிதேடுபவர் நல்ல நிலையில் அமர்ந்து மனதினை ஒருமுகப்படுத்தி இந்த ஊசல் தமக்கு கட்டுப்படுகிறதா என்பதை சோதிப்பார். அதனிடம் ஆம், இல்லை எனும் அடிப்படையில் விடையளிக்கும் வினாக்களை கேட்டு சோதிப்பார். கனி தேடுபவர் வடக்கு புறம் நோக்கி அமர்ந்து இந்த செயல்முறையினை நிகழ்த்துகிறார் என்றால். கேட்கப்படும் வினாவிற்கு ஆம் என்றால் ஊசல் வடக்கு தெற்காகவும், இல்லை என்றால் கிழக்கு மேற்காகவும் ஆடும். அறைவட்ட வடிவிலான வரைபடம் மூலமும் இவ்வகை வினா கேட்டு விடை பெறும் நிகழ்வானது நடத்தப்படும். Radionics எனப்படும் கதிர்வீச்சு மூலமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறையினில் ஊசல் முறையிலான கனிதேடல் மூலம் நோய்களை கண்டறிதல் நிகழ்த்தப்படுகிறது.
நன்கு அறியப்பட்ட கனிதேடல் வல்லுநர்களின் அடங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kenney, Andrew.
- ↑ Vogt, Evon Z.; Ray Hyman (1979). Water Witching U.S.A. (2nd ed.). Chicago: Chicago University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-86297-2.
- ↑ Regal, Brian. (2009).
- ↑ Zusne, Leonard; Jones, Warren H. (1989).
- ↑ Novella, Steve; Deangelis, Perry. (2002).