கனடா பூர்வகுடிகளின் உறைவிடப் பள்ளிகள்
கனடா உறைவிடப் பள்ளிகள் (Canadian Indian residential school) நோக்கம் கனடா நாட்டின் பூர்வ குடிகளான கனடியப் பழங்குடி மக்களின் குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து மேற்கத்தியப் பாணியில் வளர்ப்பதே ஆகும். இது ஒரு வகை பண்பாட்டுப் படுகொலை ஆகும். கனடாவில் ஆங்கிலிக்கன் மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளின் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் கனடாவின் பூர்வ குடிகளின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற மேற்கத்திய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி வழங்குகிறது. பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கம் ஆகும். [1]
கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான இந்த உறைவிடப் பள்ளிகள் கனடா அரசின் நிதி உதவியுடன் கத்தோலிக்கம் போன்ற கிறித்துவத் திருச்சபைகளால் 1876-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டது.[2]
இப்பள்ளியின் நோக்கங்களை மீறிய பழங்குடியின குழந்தைகளை, தங்கள் வழிக்கு கொண்டு வர கடுமை தண்டனைகள் வழங்குவதால், பல குழந்தைகள் இறந்து விடுகின்றனர். அவ்வாறு இறந்த குழந்தைகளை பள்ளிக்கு அருகே சவக்குழிகளில் புதைத்து விடுகின்றனர். மேலும் உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளை காண அவர்தம் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளின் நிலையைப் பெற்றோர்களால் அறிய முடியவில்லை. எனவே பள்ளிக் குழந்தைகளின் பெறோர் இந்த கட்டாய உறைவிடப் பள்ளி முறையை எதிர்த்தனர். [3] உறைவிடப் பள்ளிகளுக்கு பதிலாக, குழந்தைகள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் வகையில் சாதாரண பகல் நேரப் பள்ளிகளை துவக்குமாறு கோரிக்கை வைத்தனர்.ஆனால் கனடா அரசும், கத்தோலிக்கத் திருச்சபைகளும் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.[4]:669–674[5]}}[6][7][8]:42 ஒரு நூற்றாண்டுக்கு மேலாக செயல்பட்ட இந்த உறைவிடப்பள்ளிகளில், 1,50,000 கனடாவின் பூர்வ குடிகளின் குழந்தைகள் தங்கிப் படித்தனர்.[9]:2–3 1930களில் இந்த உறைவிடப்பள்ளிகளில் பூர்வ குடிமக்களின் 30% குழந்தைகள் படித்தனர்.[10] போதிய ஆவணம் இல்லாத நிலையில் இப்பள்ளி வளாகங்களில் இறந்த கனடா பூர்வ குடிகளின் குழந்தைகளின் எண்ணிக்கை 3,200 முதல் 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள்து. [11][12][13]
பின்னர் பழகுடியின மகக்ளின் தொடர் போராட்டத்தால், கனடா அரசு இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுத்தது. எனவே இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டை 1960 முதல் 1988-ஆம் ஆண்டு வரை படிப்படியாக நிறுத்தப்பட்டது.
உறைவிடப் பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் சவக்குழிகள்[தொகு]
கனடா நாட்டின் பிரிட்டிசு கொலம்பியா, சஸ்காச்சுவான் மற்றும் மானிட்டோபா மாகாணங்களில் கத்தோலிக்கம் மற்றும் ஆங்கிலிக்கன் கிறித்துவச் சபைகளால் 1863 முதல் 1998-ஆம் ஆண்டு வரை இயங்கிக் கொண்டிருந்த கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான உறைவிடப்பள்ளி வளாகங்களின் தரைக்கு அடியில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் திறன் படைத்த ரேடர் கருவிகளைக் கொண்டு மே மற்றும் சூன் 2021 மாதங்களில் ஆய்வு செய்கையில், செவ்விந்தியர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கனடியப் பழங்குடி குழந்தைககளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளில் 3 வயது குழந்தைகளும் அடங்கும். கனடாவின் பழங்குடி மக்களை மறைமுகமாக கிறித்துவ மத மாற்றத்திற்காக, பழங்குடி மக்களின் மொழி, பண்பாடு ஆகியவைகளை அழித்து, ஐரோப்பிய பண்பாடு, கிறித்துவச் சமயத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றவும் இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டது. கனடா அரசு உறைவிடப் பள்ளிகளின் வளாகப் புதைகுழிகளில் மரணித்த 2,800 குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.[14]
பின்னணி[தொகு]
3 வயதிற்கு மேற்பட்ட கனடாவின் பழங்குடி குழந்தைகளை, அவர்களின் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து, குழந்தைகளை கத்தோலிக்க திருச்சபையினர் நடத்தும் உறைவிடப்பள்ளிகளில் கொண்டு செல்லப்பட்டனர். உறைவிடப்பள்ளிகளில் குழந்தைகளை கிறித்துவ சமயம் மற்றும் ஐரோப்பியப் பண்பாட்டில் வளர்வதற்கும், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் எழுதவும், படிக்கவும், பேசுவும் மற்றும் பழங்குடிகளின் பண்பாடு மற்றும் மொழியை மறக்கவும் கல்வி பயிலப்பட்டது. கனடாவின் பழங்குடி குழந்தைகளை உறைவிடப்பள்ளிகளில் தங்கிப்படிக்கும் திட்டத்தை கனடிய அரசு 1863-ஆம் ஆண்டு துவக்கியது.
2007-ஆம் ஆண்டில் உறைவிடப் பள்ளியில் படிக்கும் பழங்குடி குழந்தைகள் காணாமல் போவது, அடிக்கடி குழந்தைகள் இறத்தல் மற்றும் இறந்து புதைக்கப்பட்ட குழந்தைகள் குறித்து உண்மை கண்டறிதல் மற்றும் தீர்வு காணும் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது. கனடாவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் ஆணையம் (டிஆர்சி) என்ற அமைப்பு, கத்தோலிக்க தேவாலய நிர்வாகங்கள் நடத்திய பழங்குடி குழந்தைகள் உறைவிட பள்ளிகள் குறித்து சுமார் 6 ஆண்டுகள் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையில் சுமார் 4,100 பேர் காணாமல் போய் உள்ளதாக கணக்கிட்டுள்ளது. பழங்குடியின தலைவர்களின் கூற்றுப்படி, "உறைவிட பள்ளிகளில் கல்வி பயின்ற சுமார் 6,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்கின்றனர். குழந்தைகளின் இறப்பை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மறைத்துள்ளன. மேலும் இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கம்லூப்ஸ் பள்ளியில் 52 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சூன், 2021-இல் இப்பள்ளியின் பதைகுழிகளில் 215 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உறைவிடப்பள்ளிகளில் படித்து கொண்டிருக்கும் போது இறந்து போன அல்லது காணாமல் போன பழங்குடி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நட்ட ஈடு தரும் பொருட்டு $1.5 மில்லியன் டாலர் பணம் வழங்க, இந்த ஆணையம் கனடா அரசுக்கு 2009-ஆம் ஆண்டில் பரிந்துரை செய்தது. ஆனால் கனடா அரசு இப்பரிந்துரையை ஏற்கமறுத்து விட்டது.[12]ஆராய்ச்சியாளர்கள் உறைவிடபள்ளி வளாகத்தில் செயற்கை கோள் கருவிகளுடன் ஆய்வு செய்த போது கண்டுபிடிக்கப்பட்ட பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகளை ஆவணப்படுத்தியது. ஆனால் கனடா அரசு இதனைப் புறந்தள்ளியது.[15]:1 [16]
பழங்குடி குழந்தைகள் புதைக்கப்பட்ட பள்ளிகளின் இருப்பிடங்கள்[தொகு]
பிரிட்டிசு கொலம்பியா மாகாணம்[தொகு]
முதன்முதலில் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தில் 28 மே 2021 அன்று காம்லூப்ஸ் செவ்விந்தியப் பழங்குடிகள் உறைவிடப்பள்ளி வளாகத்தில், தரைக்கடியில் உள்ள பொருட்களை கண்டறியும் ரேடார் கருவியுடன் ஆய்வு செய்த போது, 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் ஒரே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டது.[17][18] [19][20] [21][22]
1 சூலை 2021 அன்று புனித யூஜின்ஸ் உறைவிட பள்ளி அருகே 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்து. இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள், அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் பழங்குடி மாணவர்களின் உடல்களா என்பதை கண்டறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.[23] விசாரணையில் மேலும் பல கல்லறைகள் கண்டுபிடிக்கப்படுகிறது. செயின்ட் யூஜின்ஸ் உறைவிடப்பள்ளி, கத்தோலிக்க திருச்சபையால் தோற்றுவிக்கப்பட்டு 1912 முதல் 1970-களின் தொடக்கம்வரையில் இயங்கி உள்ளது.[24]
மானிட்டோபா மாகாணம்[தொகு]
ஏப்ரல் 2019இல் கனடாவின் மானிட்டோபா மாகாணத்தில் உள்ள பிராண்டன் பழங்குடி குழந்தைகள் உறைவிடப்பளளி வளாகத்தை ஆய்வு செய்த போது 3 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 4 சூன் 2021 அன்று இப்பள்ளி வளாகத்தில் 104 புதைகுழிகளில் 78 மட்டுமே பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகள் என அறிவிக்கப்பட்டது.[25][26]
சஸ்காச்சுவான் மாகாணம்[தொகு]
25 சூன் 2021 அன்று கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தின் மாரிவெல் செவ்விந்தியப் பழங்குடிகள் உறைவிடப்பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த போது, 751 பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.[27][28][29][27][30][29]
மன்னிப்பு கேட்ட போப்பாண்டவர்[தொகு]
போப் பிரான்சிஸ் 26 ஜூலை 2022 அன்று கனடாவின் பூர்வீக பழங்குடி சமூகங்களிடம், கத்தோலிக்கத் திருச்சபை நடத்திய உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படித்த பழங்குடி குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டார். கனடா மண்ணில் மன்னிப்புக் கோரியது இது இரண்டாவது முறையாகும்.[31]
இதனையும் காண்க[தொகு]
- கனடாவின் முதல் குடிமக்கள்
- கனடியப் பழங்குடி மக்கள்
- 2021 கனடா பூர்வ குடிகள் உறைவிடப் பள்ளிகளில் பிணக்குழிகள் கண்டுபிடிப்பு
- கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்
- பூர்வ குடிகள்
- ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்
அடிக்குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Gordon, Catherine E.; White, Jerry P. (June 2014). "Indigenous Educational Attainment in Canada". International Indigenous Policy Journal 5 (3). doi:10.18584/iipj.2014.5.3.6. Archived from the original on November 30, 2015. https://web.archive.org/web/20151130184321/http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj. பார்த்த நாள்: June 27, 2016.
- ↑ {{refn|group=nb|Indigenous has been capitalized in keeping with the style guide of the Government of Canada "14.12 Elimination of Racial and Ethnic Stereotyping, Identification of Groups". Translation Bureau (ஆங்கிலம்). Public Works and Government Services Canada. 2017. April 30, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dupuis, Josée (October 27, 2016). "Escape and resist: An untold history of residential schools in Quebec". CBC News. Archived from the original on December 12, 2016. https://web.archive.org/web/20161212105124/http://www.cbc.ca/news/canada/montreal/resisting-residential-schools-1.3823181. பார்த்த நாள்: December 3, 2016.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;TRCHistoryPart1
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ McKay, Celeste (April 2015). "Briefing Note on Terminology". University of Manitoba. October 25, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 30, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Residential School System". Indigenous Foundations. UBC First Nations and Indigenous Studies. April 14, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Luxen, Micah (June 24, 2016). "Survivors of Canada's 'cultural genocide' still healing". BBC. Archived from the original on July 25, 2016. https://web.archive.org/web/20160725181119/http://www.bbc.com/news/magazine-33001425. பார்த்த நாள்: June 28, 2016.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;milloy
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;TRCExec
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Residential Schools Overview". University of Manitoba. April 20, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 14, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tasker, John Paul (May 29, 2015). "Residential schools findings point to 'cultural genocide', commission chair says". CBC News. Archived from the original on May 18, 2016. https://web.archive.org/web/20160518220713/http://www.cbc.ca/news/politics/residential-schools-findings-point-to-cultural-genocide-commission-chair-says-1.3093580. பார்த்த நாள்: July 1, 2016.
- ↑ 12.0 12.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Smith
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Moran, Ry (October 5, 2020). "Truth and Reconciliation Commission". The Canadian Encyclopedia.
- ↑ Canada reveals names of 2,800 victims of residential schools
- ↑ Truth and Reconciliation Commission (2015). Canada's Residential Schools: Missing Children and Unmarked Burials - The Final Report of the Truth and Reconciliation Commission of Canada. 4. Montreal: McGill-Queen’s University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7735-9825-6. http://www.trc.ca/assets/pdf/Volume_4_Missing_Children_English_Web.pdf. பார்த்த நாள்: June 25, 2021.
- ↑ "Missing Children Project". Truth and Reconciliation Commission of Canada. 26 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கனடா பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு: இனப் படுகொலை என குற்றச்சாட்டு
- ↑ Remains of 215 children found in Canada's closed boarding school
- ↑ கனடா பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள்: கலாசார படுகொலையின் வெளிப்பாடு
- ↑ `கனடா வரலாற்றின் இருண்ட பக்கங்கள்’.. பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!
- ↑ Snucins, Andrew (May 28, 2021). "Remains of 215 children found at former Kamloops residential school". The Globe and Mail. https://www.theglobeandmail.com/canada/article-remains-of-215-children-found-at-former-residential-school-in-british/.
- ↑ Dickson, Courtney; Watson, Bridgette (May 28, 2021). "Remains of 215 children found buried at former B.C. residential school, First Nation says". CBC News. https://www.cbc.ca/news/canada/british-columbia/tk-emlups-te-secw%C3%A9pemc-215-children-former-kamloops-indian-residential-school-1.6043778.
- ↑ More graves are found at Canadian schools for the indigenous
- ↑ கனடாவில் பள்ளிக்கூடம் அருகே 182 கல்லறைகள் கண்டுபிடிப்பு
- ↑ Simon Fraser University(June 4, 2021). "Finding Indigenous Children: The Brandon Indian Residential School Project". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2021-06-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Froese, Ian (June 20, 2021). "Team investigating Brandon's former residential school for graves turns to elders for clues". CBC News. https://www.cbc.ca/news/canada/manitoba/team-investigating-brandon-former-residential-school-help-model-follow-1.6073118.
- ↑ 27.0 27.1 Nardi, Christopher (June 24, 2021). "Hundreds of bodies reported found in unmarked graves at former Saskatchewan residential school". The National Post. https://nationalpost.com/news/canada/hundreds-of-bodies-found-in-unmarked-graves-at-former-saskatchewan-residential-school.
- ↑ Neustaeter, Brooklyn (June 23, 2021). "Sask. First Nation finds hundreds of burial sites near former residential school". Toronto: CTV News. https://www.ctvnews.ca/canada/sask-first-nation-finds-hundreds-of-burial-sites-near-former-residential-school-1.5483060.
- ↑ 29.0 29.1 "Sask. First Nation announces hundreds of unmarked graves found at former residential school site". CBC News. June 23, 2021. https://www.cbc.ca/news/canada/saskatchewan/cowessess-graves-unmarked-residential-school-marieval-1.6077797.
- ↑ Taylor, Brooke (June 24, 2021). "Cowessess First Nation says 751 unmarked graves found near former Sask. residential school". Toronto: CTV News. https://www.ctvnews.ca/canada/cowessess-first-nation-says-751-unmarked-graves-found-near-former-sask-residential-school-1.5483858.
- ↑ கனடா பூர்வ குடிகளிடம் மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்
வெளி இணைப்புகள்[தொகு]
- "How do I reach the 24 Hour Crisis Line?". Indian Residential School Survivors Society (ஆங்கிலம்). 31 மே 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
- "National Centre for Truth and Reconciliation".
- "A Lost Heritage: Canada's Residential Schools". CBC Digital Archives. August 31, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- "The Legacy of the Residential School System in Canada: A Selective Bibliography (August 2009)". Library and Archives Canada. August 19, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 31, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- Pouliot-Thisdale, Eric (August 2016). Pupils at Indian residential schools: 1911 Wikwemikong, 1921 Spanish and Carleton Ontario census, Updated edition. Library and Archives Canada. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-988411-10-1. http://epe.lac-bac.gc.ca/100/200/300/eric_pouliot-thisdale/pupils_indian_residential_schools/Pupils_at_Indian_Residential_Schools_1911_1921_Wikwemikong_Spanish_Carleton_PDF_2016.pdf. பார்த்த நாள்: April 22, 2019.